தமிழகத்தில், ரேஷன் கார்டுகளில், 2013க்கான உள்தாள் இணைக்கும் பணி, ஜன., 1ம் தேதி துவங்கி, பிப்ரவரி இறுதி வரை, நடக்க உள்ளது. தமிழகத்தில், இரண்டு கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஸ்மார்ட் கார்டு திட்டம் அமலாக்கப்படுவது இழுபறியில் உள்ளதால், புதிய கார்டு வழங்கப்படாமல், உள்தாள் இணைப்பே, இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கிறது. தேசிய அடையாள அட்டைக்காக, போட்டோ, கருவிழி ரேகை பதிவு எடுக்கும் பணி, மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. இது முடிய, இன்னும் ஆறு மாதத்துக்கு மேலாகிவிடும். அதனால், உள்தாள் இணைப்பு பணியை துவக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும், உள்தாள் வடிவமைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு அச்சகத்தில், உள்தாள் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜன., 1ம் தேதி முதல், அந்தந்த ரேஷன் கடைகளில், பொருட்கள் வாங்கச் செல்லும் நுகர்வோர், உள்தாளை பெற்றுக் கொள்ளலாம். நாள்தோறும், 150 கார்டுகளுக்கு உள்தாள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிப்ரவரி இறுதிவரை, உள்தாள் வழங்கும் பணி நடக்க உள்ளதால், பொறுமையாக உள்தாள் இணைப்பை பெறலாம். இந்த உள்தாள் இணைப்பை, ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள குடும்ப தலைவரோ, தலைவியோ வந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை கண்டறியவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.