தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட நவதிருப்பதிகளில், நேற்று, வைகுண்ட ஏகாதசி திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கு, ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம்,தென்திருப்பேரை, இரட்டை திருப்பதி(இரு கோயில்கள்) , திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள, ஒன்பது பெருமாள் கோயில்கள், நவதிருப்பதிகள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோயில்களில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, சிறப்பு பூஜைகளுக்குப்பின், சுவாமி - தாயார்களுடன் அருள்பாலித்தார். பக்தர்கள் ஒவ்வொரு கோயிலாக சென்று, நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.