சிவகங்கை: சிவகங்கை, தேனி, நாமக்கல்லில் தலா ரூ.2.50 கோடியில் 120 மாணவிகள் பயிலும் வகையில், அரசு நர்சிங் கல்லூரியை துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய கிராம சுகாதார திட்டத்தின் (என்.ஆர்.எச்.எம்.,) கீழ், மத்திய அரசு, சிவகங்கை, தேனி, நாமக்கல் மாவட்டங்களில், புதிய அரசு நர்சிங் கல்லூரிகளை துவக்கவும், அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், நர்சிங் மாணவிகளுக்கு பயிற்சி வழங்கவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல், தேனி அருகே வீரபாண்டி, சிவகங்கை, அருகே பூவந்தி ஆகிய இடங்களில், மத்திய அரசு நிதி உதவியுடன், 2013 ம் ஆண்டுக்குள், அரசு நர்சிங் கல்லூரி துவக்கப்பட உள்ளது. பூவந்தியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், 882 சதுர அடியில், ரூ.2.3 கோடியில் வகுப்பறை, நிர்வாக கட்டடம், மாணவிகள் தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது. பொதுப்பணித்துறை பொறியாளர் (மருத்துவமனை கட்டடம்) ஒருவர் கூறுகையில்,"" தேசிய கிராம சுகாதார திட்டத்தில், நர்சிங் கல்லூரி கட்டுவதற்கு, திட்ட வரையரை தயாரித்து வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசுக்கு வழங்கியுள்ளோம். சென்னையில், நாளை (டிச., 26) நடக்கும் சுகாதார திட்ட இயக்குனர் கூட்டத்தில், இதற்கு அறிவிப்பு வெளியாகும். அதன்பின், 2013க்குள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை நடைபெறும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.