செம்பட்டி:ஆத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு தற்போது தமிழக முதல்வர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் விசுவ
நாதன் பேசினார்.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்,வக்கம்பட்டியில் இலவச கிரைண்டர், மிக்சி, மின்விசிறி வழங்கும் விழா நடந்தது. டி.ஆர்.ஓ. மனோகரன் தலைமை வகித்தார்.
ஊராட்சி தலைவர் ஆனிசோபி மெட்டில்டா, ஊராட்சி ஒன்றிய தலைவர் கோபி, முன்னாள் எம். எல்.ஏ., பி.கே.டி.நடராஜன் முன்னிலை வகித்தனர்.தாசில்தார் விசுவநாதன் வரவேற்றார்.
அமைச்சர் விசுவநாதன் பேசியதாவது,""சாத்தியமானவற்றை மட்டும் செய்வதாக சொல்வதும், சொன்னதை உறுதியாக செய்து முடிப்பதும்
தமிழக முதல்வரின் இயல்பு.
இதை உணர்ந்துதான் கடந்த தேர்தலில் ஆட்சி பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தனர்.
தமிழக மக்கள். ஆத்தூர் தொகுதி மக்களுக்கு மட்டும் அப்போது நம்பிக்கை ஏற்படவில்லை.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறியதால்,தற்போது ஆத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கும் தமிழக முதல்வர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் இருந்து மின்வெட்டு படிப்படியாக குறையும். முதல்வர் அறிவித்தவாறு,2013 ஜூன் மாதத்தில் மின்வெட்டு இல்லாத, மிகை மின் மாநிலமாக தமிழகம் இருக்கும்' இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க. நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன், மாவட்ட மீனவரணி இணை செயலாளர் அந்தோணி, சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் கே. எம்.எஸ். முருகன், மாவ ட்ட மகளிரணி இணை செயலாளர் சித்ரகலா, வக்கம்பட்டி ஊராட்சி அ.தி. மு.க. செயலாளர் பேட்ரிக் பிரேம்குமார், சித்தையன்கோட்டை நகர அவைத்தலைவர் அங்குச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.