உடுமலை : உடுமலை-கொழுமம் ரோடு ரயில்வே "கிராசிங்'கில், பழுதடைந்த ரோடால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
கோவை-திண்டுக்கல்
அகல ரயில்பாதை பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. பழநியிலிருந்து உடுமலை வரும் பாதையில்,
தண்டவாளம் அமைக்கும் பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இதில்,
கொழுமம் ரோடு ரயில்வே "கிராசிங்'கில் தண்டவாளத்திலிருந்து ரோடு இணைப்பு
பகுதி முறையாக மேம்படுத்தப்படவில்லை. தண்டவாளத்திலிருந்து குறிப்பிட்ட
தூரம் ஏற்பட்டுள்ள குழியில், பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தடுமாறியபடி கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், விபத்துகளை தவிர்க்க எஸ்.வி., புரம் நடைபயிற்சி சங்க நிர்வாகிகள், விபத்து பகுதியில், மண் கொண்டி குழிகளை மேடாக்கினர்.
இது
குறித்து நிர்வாகிகள் கூறுகையில், "கொழுமம் ரோடு ரயில்வே "கிராஸிங்' கில்
ஏற்பட்டுள்ள குழியை விபத்துகளை தவிர்க்க மூன்று முறை மண் கொட்டி
சீர்படுத்தியுள்
ளோம். இப்பகுதியில், ஏற்படும் விபத்துகளினால்,
உயிரிழப்புகளை தடுக்க ரயில்பாதை பணிகள் விரைவில், முடிக்கப்பட்டு தார்ரோடு
போடப்பட வேண்டும்' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.