திண்டுக்கல்:வேடசந்தூரை சேர்ந்த மாணவன், ரஷ்யாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க கல்விக்கடன் வழங்ககோரி பாலபாரதி எம்.எல்.ஏ., கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனுகொடுத்தார்.
வேடசந்தூரை சேர்ந்தவர் சையதுஅப்துல்ரகுமான்சேக்பரித். இவர், சென்ற ஆண்டு பிளஸ் 2 படித்து 47 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.
இவருக்கு ரஷ்யா விலுள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்துள்ளது. மேற்
படிப்பிற்காக செல்ல கல்வி கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பத்திருந்தார்.
60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் தான் கல்விக்கடன் வழங்கப்படும், என வங்கி நிர்வாகம் இவரது விண்ணப்பத்தினை, தகுதியில்லை என கூறி, தள்ளுபடி செய்துவிட்டது.
இதை கண்டித்து திண்டுக்கல்லில் மாணவர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாலபாரதி எம்.எல்.ஏ., நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வெங்கடாசலத்திடம், மாணவனுக்கு கல்விக்கடன் வழங்ககோரி, மாணவருடன் வந்து மனுகொடுத்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் பதிலளித்தார்.
வங்கி அதிகாரிகள் கூறுகையில்; 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தான் கல்விக்கடன் வழங்கவேண்டும் என, உத்தரவு உள்ளது.
இதை மீறி கொடுக்கவேண்டும் என்றால் மண்டல அலுவலகங்களுக்கு அதிகாரம் இல்லை. தலைமை அலுவலகத்தை நாடி அனுமதிபெற்றுவந்தால் தான் வழங்க
முடியும்,'' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.