திண்டுக்கல்:அரசுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டியதாக, திராவிட கழகத்தின் தென் மண்டல அமைப்பு செயலாளர் துரை சம்பத்,44, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் வடக்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார், ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலத்தின் கீழ், உள்ள அப்பாஸ் என்பவரின் பழக்கடையின் அருகில் நின்றுகொண்டிருந்த இருவரை சந்தேகத்தின்பேரில், பிடித்து விசாரித்தனர்.
அதில் ஒருவர், திண்டுக்கல் ஆண்டாள் நகரை சேர்ந்த துரை சம்பத், 44. இவர் திராவிட கழகத்தின் தென் மண்டல அமைப்பு செயலாளர். மற்றொருவர் அக்கட்சி உறுப்பினரான அணைப்பட்டி கிருஷ்ணமூர்த்தி, 45, என தெரியவந்தது.
அவர்கள் மீது சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் கருவறை நுழைவு போராட்டத்தில், திரளாக பங்கேற்க வேண்டும், அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் தடுக்க வேண்டும், அரசு பஸ்களை ஓடவிடக்கூடாது என்று சதித்திட்டம் தீட்டியதாக வுழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.