பொள்ளாச்சி: சட்டம் - ஒழுங்கு பராமரிப்புக்கு இடையே, சேவலை பராமரிக்கும் புதிய பொறுப்பும், பொள்ளாச்சி தாலுகா ஸ்டேஷன் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா ஸ்டேஷன் போலீசார், எல்லைக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளுக்குள் அடிக்கடி ரோந்து சென்று, குற்றத்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும், சீட்டாடுவோர், சேவல் சண்டையில் ஈடுபடுவோர் பிடிபடுவது வழக்கம். சேவல் சண்டையில் பறிமுதல் செய்யும் சேவல்களை, கோர்ட்டில் ஒப்படைக்கும் வரை, கம்பு, சோளம், ராகி உட்பட தீவனங்களை வழங்கி, போலீசார் பாதுகாத்து வருகின்றனர். தாலுகா எஸ்.ஐ., அம்சவேணி கூறுகையில், ""அடிக்கடி மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணியின் போது, சீட்டாட்ட கும்பலை சேர்ந்தவர்களும், சேவல் சண்டை நடத்துவோரும் சிக்குகின்றனர். பறிமுதல் செய்யப்படும் சேவல்களை, கோர்ட்டில் ஒப்படைக்கும் வரை, பாதுகாத்து வருவது எங்கள் பொறுப்பு,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.