விருதுநகர் முதலிப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்துக்குப்பின், அதிகாரிகள் குழு, தொடர் கண்காணிப்பு செய்ததால், பட்டாசு ஆலைகளில் குறைந்திருந்த விதிமீறல்கள், தற்போது, மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து உள்ளன. முதலிப்பட்டியில், செப்., 5ம் தேதி விதிமீறி பட்டாசு தயாரித்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 41 பேர் பலியாயினர்; 54 பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில், அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு, ஆய்வு நடத்தியது. இதில், வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் அனுமதி வழங்கிய, 601 பட்டாசு ஆலைகளில், 56 ஆலைகளும்; டி.ஆர்.ஓ., அனுமதி வழங்கிய, 88 பட்டாசு ஆலைகளில், ஐந்து ஆலைகளின் உரிமம், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இதுதவிர, மொத்தமுள்ள, 689 ஆலைகளில், 614க்கு உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என, விளக்கம்கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கப்பட்ட ஆலைகள், தீபாவளிக்கு பின், குறைகளை சரி செய்து, வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன. அவற்றில், அதிகாரிகள் மீண்டும் ஆய்வு நடத்தி, இதுவரை, 12 ஆலைகள் உற்பத்தியை துவக்க, தடையில்லா சான்று வழங்கி உள்ளனர். அந்த ஆலைகள், மாவட்ட நிர்வாகத்திடம், சல்பர் வெடிமருந்து பொருள் வினியோகம் செய்ய கோரியுள்ளன. இதுகுறித்து, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நோட்டீஸ் வழங்கப்பட்ட பட்டாசு ஆலைகளில், மீண்டும் ஆய்வு செய்ய, வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால், ஆலை உரிமையாளர்கள் சொல்வதை நம்பி, அதிகாரிகள் தடையில்லா சான்று வழங்கி வருகின்றனர்; மாவட்ட நிர்வாகமும், பட்டாசு ஆலைகள் ஆய்வில், ஆர்வம் காட்டவில்லை. உரிமம் பெற்றுள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது, அடுத்த தீபாவளி சீசனுக்கு உற்பத்தி நடந்து வருகிறது; அதேநேரம், சில ஆலைகளில் விதிமீறல்களும் தொடர்கிறது. சில ஆலைகளில், <உரிமம் பெற்றவர்கள் தொழில் நடத்தாமல், குத்தகைக்தாரரிடம் ஆலையை ஒப்படைத்து விடுகின்றனர். குத்தகைதாரர்கள், அனுமதியில்லாத பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கின்றனர். அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே, விபத்துகளை தடுக்க முடியும்; தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பும் கிடைக்கும்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.