அனுப்பர்பாளையம் : "திருப்பூர், அனுப்பர்பாளையம் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க வருபவர்களிடம் ஒப்பந்ததாரர் கட்டாய சுங்கம் வசூல் செய்வதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது; மாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளை யம் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை உள்ளது. ஞாயிறுதோறும் சந்தை கூடும். திருப்பூர், அவிநாசி, பெருமாநல்லூர், குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகின்றனர்.
திருப்பூர், அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி, ஆத்துப்பாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் பொருட் கள் வாங்கிச் செல்கின்றனர்.அவர்கள் கூறியதாவது:இதற்கு முன், ஒரு கடை அமைக்க ஏழு அடி ஒதுக்கப்பட்டது; தற்போது அளவை குறைக்கின்றனர். இரண்டு கடை அமைத்த இடத்தில், மூன்று கடை அமைக்கின்றனர்.
பொருட்களை அடுக்கி வைக்க முடிவதில்லை. சிறு கடைகளுக்கு பொருட்கள் வாங்கிச் செல்லும் வியாபாரிகளிடம் சுங்கம் வசூலிக்கக்கூடாது. கட்டாயப்படுத்தி 10 ரூபாய் வசூலிக்கின்றனர். கொடுக்கவில்லை என்றால் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. இதனால், வியாபாரிகள் வர தயக்கம் காட்டுகின்றனர்; வியாபாரம் பாதிக்கப்படுகிறது.மற்ற சந்தைகளைவிட, இங்கு கூடுதல் தொகை வசூலிக்கின்றனர். உப்பு மற்றும் விரைவில் அழுகக்கூடிய பொருட்களுக்கு சுங்கம் வசூலிக்கக்கூடாது. ஆனால், வசூலிக்கின்றனர். ஒப்பந்ததாரரின் கெடுபிடியால், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.