பூமியில் 5 டி.எம்.சி., தண்ணீர் சேமிப்பு திருவாரூர் மாவட்டத்துக்கு விருது
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்தை, செயல்படுத்தியதன் மூலம், 5 டி.எம்.சி., தண்ணீர், பூமிக்கடியில் சேமிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக முதல்வர், விருது வழங்கியுள்ளார். சென்னையில் கடந்த வாரம், கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் மாநாடு நடந்தது. இதில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது, விரைவாக, நடவடிக்கை எடுக்கப்பட்டதற்காகவும், சிறப்புத் திட்டம் மூலம், நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்தை அமல் படுத்தியதற்காகவும், திருவாரூர் மாவட்டத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா, இரண்டு விருதுகளை, கலெக்டர் நடராஜனிடம், வழங்கினார். இது குறித்து, திருவாரூரில் கலெக்டர் நடராஜன் கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில், குடிநீர் ஆதாரத்தை உயர்த்தும் நோக்கில், 3,500 குளங்களில், 6 மீட்டர் ஆழத்தில் குழாய் அமைத்து, நிலத்தடியில் உள்ள, தண்ணீரை உயர்த்த, வழி வகுத்ததால், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும், ஆர்வத்துடன் செயல்பட்டனர். இதனால், 5 டிஎம்சி., தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதுடன், உவர்ப்பு நீர், நன்னீராக மாற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, ஆறுகளில், 745 கிமீ., தூரத்திற்கு, 1,415 இடங்களில், நீர் செறியூட்டல், "பைப்' அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் குறித்து, முதல்வரிடம் விளக்கமளித்ததை பாராட்டியதுடன், விருதும் வழங்கினார். மேலும், 4,000 இடங்களில், நிலத்தடி நீர் செறிவூட்டல் பைப் அமைக்க, கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, முதல்வர், 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இதன் மூலம், பூமிக்கடியில், 10 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். முதல்வரின் தனிப் பிரிவிற்கு, வரும் மனுக்கள் குறித்து, நடவடிக்கை எடுத்ததில், திருவாரூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு, முதல்வர் விருது வழங்கினார்.திருவாரூர் மாவட்டத்திற்கு, இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ஆறுகளில், மண்டியிருந்த காட்டாமணக்கு மற்றும் முட்புதர்கள், தேசிய ஊராக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் அகற்றப்பட்டு, நீர் ஆதாரத்தை பெருக்க, எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும், முதல்வர் பாராட்டினார். இவ்வாறு அவர் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25-டிச-201217:51:13 IST Report Abuse
Nallavan Nallavan திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் சாதித்த விசயமா?
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
25-டிச-201215:33:14 IST Report Abuse
ganapathy அம்மாவின் சிறப்பு இது தான். ஜால்ரா அடிக்கற கூட்டம் காலில் விழுகிற கூட்டம் என்று அவரை சுற்றி இருந்தாலும், நல்ல செயல்படுகிரவர்களையும் அடையாளம் காண்கிறார். இதை எல்லா இடத்திலும் செயல்படுத்தினால் அடுத்த மாநிலத்தில் கெஞ்ச வேண்டிய தேவை இருக்காது. இவருடைய முயற்சி பாராட்டுக்கு உரியது. எல்லா மாவட்டங்களிலும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
25-டிச-201210:21:36 IST Report Abuse
தமிழ் குடிமகன் பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201209:41:55 IST Report Abuse
suresh இந்த தி்ட்டம் எல்லா மாவட்டத்தி்லும் செயல்பட்டால் நல்லது
Rate this:
Share this comment
Cancel
அந்நியன் - வயல் வெளிகள்,இந்தியா
25-டிச-201209:37:40 IST Report Abuse
அந்நியன் பாராட்டுக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் சக அதிகாரிகளுக்கும்
Rate this:
Share this comment
Cancel
boopatheeswaran - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201209:33:10 IST Report Abuse
boopatheeswaran ஒவ்வொறு மாவட்டத்தி்லும் இம்முறையை பயன்படுத்தி்னால் நமது தேவையை நாமே நிறைவு செய்து கொள்ளலாம்.. இம்முறையை செயல்படுத்தி்ய கலெக்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...
Rate this:
Share this comment
Cancel
jk,attur - salem  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201209:08:42 IST Report Abuse
jk,attur உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
25-டிச-201208:20:06 IST Report Abuse
Guru பாராட்டுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்