Ooty is getting ready for Summer | கோடை சீசனுக்கு தயாராகுது ஊட்டி: மலர் கண்காட்சிக்காக 3 லட்சம் செடிகள் நடவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடை சீசனுக்கு தயாராகுது ஊட்டி: மலர் கண்காட்சிக்காக 3 லட்சம் செடிகள் நடவு

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவை, கோடை சீசனுக்கு தயார்படுத்த, வெளிநாட்டு மலர் செடிகள் உட்பட, மூன்று லட்சம் மலர் செடிகளை நடவு செய்யும் பணி, நேற்று துவங்கியது. ஊட்டியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் துவங்கும். உள்ளூர், வெளியூர், பிற நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், கோடை சீசனின் போது ஊட்டிக்கு அதிகளவில் வருவர். இவர்களின் முதல் பொழுது போக்கு, ஊட்டி தாவரவியல் பூங்காவை கண்டுகளிப்பது தான். வரும் ஏப்ரலில் துவங்கவுள்ள கோடை சீசனுக்காக, பூங்காவை தயார்படுத்தும் பணிகள், இப்போதே துவக்கப்பட்டுள்ளன. தோட்டக்கலை துறை இணை இயக்குனர் தலைமையில், மலர் செடி நடவுப் பணி, நேற்று துவங்கியது. தோட்டக்கலை துறை உதவி இயக்குனர், மோகன் கூறியதாவது: ஊட்டி தாவரவியல் பூங்காவில், அடுத்தாண்டு மே மாதம், 117வது மலர் கண்காட்சி நடக்கவுள்ளது. இதற்காக, சால்வியா, டெல்பீனியம், பென்ஸ்டீன் உட்பட, 52 வகையை சேர்ந்த, மூன்று லட்சம் மலர் செடிகள், பூங்காவில் உள்ள மலர் படுகைகளில் நடவு செய்யப்படவுள்ளன. இந்தாண்டு முதன் முறையாக, ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட, வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, 13 வகை மலர் செடிகள், நடவு செய்யப்படவுள்ளன. இவ்வகை செடிகளில் பூக்கும் மலர்கள், ஒரு மாதத்துக்கு உதிராமல், மலர்ந்திருக்கும் தன்மையை கொண்டிருக்கும். இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளில் பூக்கும் மலர்கள், பூத்து குலுங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை