Advertisement
பாலியல் பலாத்காரத்தால் பலியான மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,01:05 IST

சென்னை: பாலியல் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட, தூத்துக்குடி மாணவியின் குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த, சவுந்தரராஜன் என்பவர் மகள், புனிதா, 13; 7ம் வகுப்பு மாணவி. இம்மாதம், 20ம் தேதி, பாலியல் பலாத்கார முயற்சியில், கொலை செய்யப்பட்டார். புனிதாவின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். மேலும், யானை தாக்கியதில் இறந்த, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த, முனுசாமி, கோவை மாவட்டம், எட்டிமடையைச் சேர்ந்த, ராமாத்தாள் ஆகியோர் குடும்பங்களுக்கு, தலா, மூன்று லட்சம் ரூபாய், வனத்துறை மூலம் வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
babu - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-டிச-201212:11:46 IST Report Abuse
babu அம்மா " யானை மிதித்த குடும்பத்திற்கு மூன்று லட்சம் , கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஒரு லட்சமா? என்ன கொடுமை இது? பாவம கொஞ்சம் கருணை காட்டுங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.