சென்னை: "ராஜா அண்ணாமலை புரம், முண்டக்கண்ணி அம்மன் கோவில் திருப்பணி விரைவாக நடந்து வருகிறது. அதற்காக வாங்கிய நிதிக்கு, முறையான ஆவணங்கள் உள்ளது,'' என, பர்வதகுல மீனவர் கிராம பஞ்சாயத்து தலைவர், ஆனந்தன் கூறினார். இது குறித்து, ஆனந்தன் கூறியதாவது: பழைய கணக்கு வழக்குகளை காட்டாத, பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஓட்டு குரிமையை, தலைவர் என்ற முறையில் பறித்தேன். பஞ்சாயத்து தலைவர், ஓட்டுரிமையை பறிப்பதற்கு, முன் உதாரணம் உள்ளது. பஞ்சாயத்துக்கு உட்பட்ட மனையை புதிதாக கிரையம் செய்ய, மனை எண் குறிப்பிடும் போது, எதிர்பாராத விதமாக தவறு நடந்து விட்டது. முண்டக்கண்ணி அம்மன் கோவில் திருப்பணிக்காக வாங்கிய பணத்திற்கு, முறையான ஆவணங்கள் உள்ளன. கோவில் திருப்பணிகளும் முறையாக நடந்து வருகின்றன. ஏற்கனவே, நிர்வாகத்தில் இருந்த சிலர், என் வளர்ச்சியை பிடிக்காமல், அவதூறு பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.