கோவை: முன்னாள் எம்.பி., அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், "இந்து' என்ற ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த என்.ராம், "கஸ்தூரி அண்ட் சன்ஸ்' இயக்குனர் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர், கோவை கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டை சேர்ந்தவர், பழனிச்சாமி. அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யான இவர், 2004ல், சென்னை மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலையில், 400 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கினார். இந்த நிலம், இந்து நாளிதழ் நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு சொந்தமானது. சில ஆண்டுகளில் நிலத்தின் மதிப்பு 300 கோடி ரூபாயாக உயர்ந்த நிலையில், "இந்து' நிறுவன இயக்குனர்கள், அதை தங்களுக்கே திருப்பித் தரும்படி கேட்டனர்; பழனிச்சாமி மறுத்து விட்டார். இதற்கிடையே, 2008, பிப்., 24ல், கோவை சேரன் டவர்ஸ்ல் உள்ள, பழனிச்சாமியின் அலுவலகத்தில் 10 பேர் நுழைந்து, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்கு பத்திரங்கள், ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட் உ<த்தரவுபடி, ராம், கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவன இயக்குனர் ரமேஷ் ரங்கராஜன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி உட்பட, 10 பேர் மீது, சதித் திட்டம் தீட்டுதல், சட்ட விரோதமாக அலுவலகத்திற்குள் நுழைந்து கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளில், செப்., 24ல், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதியப்பட்டது. முன்ஜாமின் கேட்டு, ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தரேசன், "கோவை ஜே.எம்., எண்: 1 கோர்ட்டில் சரணடைந்து, 10 ஆயிரம் ரூபாய் உத்தரவாத ஜாமினில் செல்ல வேண்டும்' என்றும், "கோவை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஒரு வாரத்திற்கு காலை 10:30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என்றும், கடந்த 19ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, கோவை ஜே.எம்., எண்: 1 கோர்ட்டில், மாஜிஸ்திரேட் முனுசாமி முன்னிலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் சரணடைந்தனர்; உத்தரவாத பணம் செலுத்தி ஜாமினில் வெளிவந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.