அணைகளில் நீர் இல்லாததால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர் மின் நிலையங்களில், நேற்று காலை நிலவரப்படி, 157 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டது. மாநிலத்தில், குந்தா, காடம்பாறை, ஈரோடு மற்றும் நெல்லை வட்டங்களில், மொத்தம், 40 புனல் மின் உற்பத்தி நிலையங்கள் ள்ளன. இவற்றின் மூலம், 2,223 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தென் மேற்கு, வட கிழக்கு பருவ மழை காலமான, ஜூன் முதல் அக்டோபர் வரை, அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும். அப்போது, கணிசமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், நடப்பாண்டு, தென் மேற்கு பருவ மழை, 24 சதவீதமும், வடகிழக்கு பருவ மழை, 15 சதவீதமும் குறைந்துள்ளது. இதனால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. போதிய மழையின்மையால், முக்கிய அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது; நீர் மின் உற்பத்தியும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 2,223 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, நீர் மின் நிலையங்களில், நேற்று காலை நிலவரப்படி, 157 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டது. போதிய தண்ணீர் இல்லாததால், பெரும்பாலான நீர் மின் உற்பத்தி நிலையங்களில், மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புனல் மின் உற்பத்தி நிலையங்கள், ஆண்டு முழுவதும் இயங்கக்கூடியவை அல்ல; தென் மேற்கு பருவ காலங்களில், தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். அப்போது கணிசமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். நடப்பாண்டில், பருவ மழைகள் பொய்த்ததால், அணைகளில் நீர் இல்லை; இதனால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி இல்லாத காலங்களில், பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பராமரிப்பு பணியும், சரிவர நடக்கவில்லை. பராமரிப்பு இல்லாததால், பல மின் உற்பத்தி நிலையங்கள் அடிக்கடி பழுதாவதால், உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், பராமரிப்புக்கான காலத்திலாவது, அப்பணியை முறையாகச் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.