நிலக்கோட்டை: மழை இல்லாமல் வைகை ஆறு வறண்டதால், ஆற்றுப் படுகை விவசாயிகள், இரு போக நெல் சாகுபடி செய்யவில்லை. வைகை ஆற்றில் உள்ள குடிநீர் கிணறுகள் வறண்டு வருவதால், கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டை தாலுகாவில், வைகை ஆறு, பெரியாறு கால்வாய் பாசனம் மூலம், இருபோக நெல் சாகுபடி செய்வர். முதல் போகம் ஜூனில் துவங்கி, அக்டோபரில் முடியும். இரண்டாம் போகம் அக்டோபர் மாத இறுதியில் துவங்கி, ஜனவரி வரை நீடிக்கும். தென்மேற்கு பருவ மழை பாய்த்ததால், முதல் போக சாகுபடி செய்யவில்லை. இரண்டாம் போகத்தின் போது, 10 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை நம்பி, விலைக்கு விதை நெல் வாங்கி, நாற்றாங்கால் விதைத்தனர். வடகிழக்கு பருவ மழையும் பொய்த்ததால், வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை; அணையிலிருந்தும் நீர் திறக்கப் படவில்லை. மழையில்லாததால், விதைத்த நாற்றாங்காலை அப்படியே விட்டு விட்டனர். நாற்றாங்காலில் ஆடு, மாடுகள் மேய்கின்றன. வைகை ஆற்றுப் பாசனத்தை நம்பியிருக்கும் விளாம்பட்டி விவசாயி ரவிச்சந்திரன் கூறுகையில், ""வைகை அணையை நம்பி, 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. நிலக்கோட்டை தாலுகாவில் மட்டும், 2,000 ஏக்கரில், இரு போக நெல் சாகுபடி நடக்கும். மழை இல்லாததால் இரு போகத்தையும் இழந்து விட்டோம். வைகை பாசனத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார். வைகை ஆறு வறண்டதால், ஆற்றங்கரையோரம் உள்ள கிணறுகளும் வற்றி விட்டன. வைகையை நம்பி உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகளை சேர்ந்த, குடிநீர் கிணறுகளும் வற்றி வருகின்றன. இதே நிலை நீடித்தால், கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என, ஊராட்சித் தலைவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.