Advertisement
மதுரையில் மீண்டும் 'டெங்கு' : இரு சிறுமிகள் பலி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,01:10 IST

மதுரை: பத்து நாட்களாக "டெங்கு' உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் இரு சிறுமிகள், "டெங்கு' காய்ச்சலுக்கு பலியாகினர். மதுரை பழங்காநத்தம் நடராஜன் மகள் ஸ்வாதிகா,13. காய்ச்சலால் மூன்று நாட்களுக்கு முன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "டெங்கு' உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று இறந்தார். பேரையூர், சந்தையூர் பாண்டியராஜ் மகள் மணிமேகலை,13. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து, அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். என்ன வகை காய்ச்சல் என அறிவதற்குள், உயிரிழந்தார். "டெங்கு' ஆக இருக்கலாம், என சந்தேக்கிக்கப்படுகிறது. இதுவரை தென் மாவட்டங்களிலிருந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட "டெங்கு' நோயாளிகளில் 43 பேர் பலியாகினர். மதுரையில் மட்டும் 24 பேர் "டெங்கு', மூளைக் காய்ச்சலில் 9 பேர் இறந்தனர். தற்போது ஏழு பேர் "டெங்கு' சிகிச்சையும், 30 பேர் அரசு கூறும் மர்மகாய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
ganapathy - khartoum,சூடான்
26-டிச-201200:29:22 IST Report Abuse
ganapathy எல்லா இடத்திலும் சாப்பிட்டு விட்டு உணவை எச்சிலை வெளியில் எறிவோம். மலம், மூத்திரம் வெளியில் கண்ட இடத்தில் அசிங்கம் பண்ணுவோம். அரசும் சாக்கடை சீரமைக்க ஒன்னும் செய்யாது. பழைய டயர் எல்லாத்தையும் நாம பொக்கிஷம் போல சேர்த்து வைக்க அதில் தண்ணீர் தேங்கி கொசு உருவாகும்.தண்ணீர் தேங்கிய இடத்தில் சிறிது மோட்டார் ஆயில் விடுங்கள் கொசு பெருகாது. தண்ணீர் தேங்காமலும் பார்த்து கொள்ளலாம். அரசியல் கட்சிக்கு கொடி பிடிப்பது போன்றவை செய்யாமல் நம்முடைய சுற்று புறத்தை சீரமைக்க சமூக சேவை செய்வோம்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
s.maria alphonse pandian - mettur,இந்தியா
25-டிச-201216:37:23 IST Report Abuse
s.maria alphonse pandian தமிழகத்தில் டெங்கு காய்ச்சலே இல்லை என்றல்லவா அரசு கூறுகிறது?
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Inish Ingersal - DusselDorf,ஜெர்மனி
25-டிச-201215:29:30 IST Report Abuse
Inish Ingersal நான் மதுரைக்கு சென்ற வாரம் சென்று இருந்தேன். மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இரண்டாவது பாலம் அருகில் நண்பரின் வீடு, நான் சென்ற நேரம் சாயந்திரம் ஆறு மணி இருக்கும். கொசுக்கள் என்றால் அளவிட முடியாத அளவுக்கு கொசுக்கள், என்னை சுற்றி ஒரு பத்தாயிரம் கொசுக்களாவது இருக்கும். என்னை சுற்றி மட்டும் இல்லை, அங்கு நின்று இருந்தவர்கள் அனைவரின் நிலைமையும் அப்படி தான் இருந்தது. கார் கதவை திறந்து மூடுவதற்குள் ஆயிரம் கொசுக்கள் ஆவது காருக்குள் சென்று விட்டது. அடுத்த நாள் முழுக்க கொசுக்களை விரட்டி கொண்டே தான் கார் ஓட்டினோம். போன வருடத்தை விட இந்த வருடம் கொசுக்கள் நிறைய அதிகம் ஆகி விட்டது. இது ஒரு பெரிய பூதாகரம் ஆவதுற்குள் உடனடி நடவடிக்கை தேவை. சென்ற வருடம் இவ்வளவு இல்லை , எங்கோ ஏதோ நம்மை அறியாமல் தவறு நடக்கின்றது, நம்முடைய உள்ளாட்சி கவுன்சிலர்கள் மக்கள் சேவை செய்வதை விட காசு பார்ப்பதில் தான் வேலை செய்கின்றார்கள். பழைய ஆட்சியில் இப்படி இல்லை. சாக்கடை அடைப்புகள் சரி செய்வதிலும் அவர்கள் அதி காலை நேரத்தில் சென்று கவனிப்பார்கள்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
25-டிச-201206:02:50 IST Report Abuse
Guru தொடர்கதையாய் இதுமாதிரி உயிர் இழப்புக்கள் நடத்துகொண்டே இருக்கிறது.., சுகாததுரை இதை கவனித்தால் நல்லது
Rate this:
0 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.