திருவாரூர்: மன்னார்குடியில், கூலித் தொழிலாளியை குளத்தில் தள்ளி கொலை செய்த பெண்ணை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த, மண்டுவாகுளத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக, கிராம நிர்வாக அலுவலர், மன்னார்குடி தாலுகா போலீசுக்கு, கடந்த, 19ம் தேதி தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரித்ததில், புண்ணியக்குடி மேம்பாலம் கிராமத்தை சேர்ந்த சங்கர், 42, கூலித் தொழிலாளி என, தெரிய வந்தது. இறந்த சங்கரின் அண்ணன் சம்பத், தன் தம்பியை யாரோ கொலை செய்து குளத்தில் வீசியுள்ளனர் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, பிணத்தை வாங்க மறுத்தார். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உத்தரவாதம் அளித்ததைத் தொடர் ந்து, சங்கர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், 23ம் தேதி, உள்ளூர் வட்டம் கோவிந்தராஜ் மனைவி மாரியம்மாள், 42, என்பவரிடம், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர். மாரியம்மாள் கூறியதாவது: பத்து ஆண்டுகளாக, சங்கருடன் கள்ளத் தொடர்பு இருந்தது. அவ்வப்போது தொல்லை கொடுத்தார். கடந்த, 18ம் தேதி மாலை, அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு, எனக்கு போன் செய்து, தொந்தரவு செய்தார். எங்கள் ஊர் குளத்தில் அமர்ந்து, மீண்டும் அழைத்தார். என் கணவருக்கு தெரிந்தால் பிரச்னையாகும் எனக்கருதி குளத்திற்கு சென்று விபரம் கேட்டேன். அப்போது குளக்கரையில் ஆசைக்கு இணங்க, என்னை அழைத்தார். இதனால் கட்டையால் தாக்கி குளத்தில் தள்ளி விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். காலையில் சங்கர் இறந்ததாக அறிந்தேன். இவ்வாறு போலீசில் மாரியம்மாள் தெரிவித்துள்ளார். சந்தேக மரணம் என்பதை. கொலை வழக்காக மாற்றிய போலீசார், மாரிம்மாளை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.