400 arrested and released for temple entry protest | கருவறை நுழைவு போராட்டம் 400 பேர் கைதாகி விடுதலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருவறை நுழைவு போராட்டம் 400 பேர் கைதாகி விடுதலை

Added : டிச 25, 2012 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்ட, பெரியார் திராவிடர் கழகத்தினர், 400 பேர், சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டனர். அனைத்து ஜாதியினரும் அச்சகர் ஆகலாம் என்பதற்கு, அரசியல் சட்டத்தின், 17வது பிரிவை திருத்த வேண்டும்; அனைத்துப் பிரிவினரும், கருவறைக்குள் சென்று இறைவனை வணங்க அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகத்தினர், கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதற்காக, மைலாப்பூர் நகேஸ்வரராவ் பூங்கா அருகே, பெ.தி.க.,வினர் திரண்டனர். இவர்கள், ஊர்வலமாக கபாலீஸ்வரர் கோவிலுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், சாலைகளை மறித்து, போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட, 400 பேரையும், போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். பெ.தி.க.,வினரின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கபாலீஸ்வரர் கோவில் முன், இந்து அமைப்பினர் திரண்டிருந்தனர். "கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு, கருவறை நுழைவு பற்றிய கவலை எதற்கு' என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.பெ.தி.க.,வினர் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
25-டிச-201214:37:03 IST Report Abuse
Vaduvooraan அது சரி சமயபுரம், சிறுவாச்சூர் போன்ற மாரியம்மன் காளியம்மன் கோவில்களில் காலம் காலமாக பிராம்மணர்கள் அல்லாதோர் தான் பூசை நடத்தி வருகிறார்கள். அங்கு கூட கருவறைக்கு வர யாருக்கும் அனுமதி இல்லை. அரை தேங்காய் முடிக்கும் அழுகிய வாழைபழதுக்கும் அல்லாடிக் கொண்டு தட்டில் விழும் சில்லறை காசில் காலத்தை ஓட்டும் அர்ச்சகர் பதவி எதோ IAS பதவி பறிபோனது போல இவர்கள் செய்யும் அலப்பறை இருக்கிறதே அதுதான் காமடி ராவணன் தமிழன் என்பார்கள் ராமனை திட்டி தீர்ப்பார்கள் ஆனால் ராமாயணம் கட்டுக் கதை என்பார்கள். இந்த மாதிரி ஏதாவது முன்னுக்கு பின் முரணாக உளறுவார்கள். இந்து மத துவேஷத்தை தவிர இதில் வேறு ஒன்றும் சரக்கு கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
25-டிச-201214:28:22 IST Report Abuse
Vaduvooraan கலைஞர் தொலைக் காட்சியில் இன்று கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்சிகள் ஆனால் பொங்கல் தீபாவளி நாட்களில் மட்டும் விடுமுறை தின சிறப்பு நிகழ்சிகள் மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து செய்தி இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் மவுனம் இது அவர்களது இந்து மத துவேஷத்திற்கு ஒரு சான்று ஈ.வே.ரா அறக் கட்டளை தவிர கட்சியில் இருந்து பிரிந்த பல துண்டு கட்சிகளுக்கு நிதி வசதிக்கு பஞ்சமில்லை. தாங்கள் இன்னும் இயங்கிக் கொண்டிருப்பதை அவ்வபோது அவர்கள் காட்டிக் கொண்டு கொஞ்சம் செலவு செய்து கொண்டிருக்க வேண்டும். அங்கு குழுமியிருந்த இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணியினர் வழிபாட்டுக்கு கையில் தேங்காயுடன் காத்திருந்திருக்க வேண்டும். கதை வேறு மாதிரி போயிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
25-டிச-201210:28:31 IST Report Abuse
Ajaykumar "கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு, கருவறை நுழைவு பற்றிய கவலை எதற்கு"
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
25-டிச-201212:20:39 IST Report Abuse
Karam chand Gandhi மனிதர்களை கோவிலுக்குள் நுழையவிடாத காட்டுமிராண்டித்தனம் எதற்கு. இந்தியாவில் இது ஒரு கேவலமான நிலை....
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-டிச-201209:29:34 IST Report Abuse
Lion Drsekar கடவுளே இல்லை என்ற பிறகு நாம் ஏன் அந்த கருவறைக்குள் செல்ல முற்படவேண்டும், மாறாக இந்த அரசியல் கட்சிகளில் ஊடுருவி இருக்கும் அவலங்களை மற்றும் மாநில அளவில் புற்றுநோயைவிட அதிக அளவில் பரவி வரும் லஞ்சம், சுகாதாரக் கேடு, குப்பை , சாக்கடை, மக்களுக்கு நல்ல உடல் ஆரோகியம், சுத்தமான குடிநீர் போன்றவற்றிற்காக பாடுபட்டால் இந்த வளரும் இளைஞர் சமுதாயம் வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாராட்டும், காரணம் தாங்கள் மேற்கொண்ட பணி மிக சிறப்பாக நடைபெற்றது அதைவிட ஒரு படி மேலே கூறவேண்டுமானால் மிக மிக நன்றாகவே நடந்து கொண்டு இருக்கின்றது, எந்த ஒரு ஜாதியினர் அழிய வேண்டும் என்று கருதி துவங்கப்பட்ட இந்த இயக்கத்தின் தாக்கம் மிக மிக நல்ல முறையில் நடைபெறுவதற்கு ஒரே சான்று அந்த ஜாதியினர் தற்போது தாழ்த்தப்பட்ட, மிக மிக தாழ்த்தப்பட்ட, மலைசாதியினரைத் திருமணம் செய்து கொள்ள ஆரம்பித்து விட்டனர், மேலும் அவர்களே அவர்கள் ஜாதியினரை வெறுக்கும் அளவிற்கு போய்க்கொண்டு இருக்கின்றது/ இனி யார் தடுத்தாலும் இதை நிறுத்த முடியாது அந்த அளவிற்ர்க்கு சென்று கொண்டு இருக்கும்போது, மிக மிக சக்தி வாய்ந்த, கட்டுப்பாடான ஒரு மிகப் பெரிய இயதக்தினை கொண்டுள்ள தாங்கள் நாட்டை நல்வழிப்படுத்தும் நிகழ்சிகளில் பங்கேற்றால் இந்த உலகம் போற்றும், இன்றைக்கு நாட்டிற்குத் தேவை ஒரு சிறந்த தலைவன், வந்தே மாதரம்,
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
25-டிச-201212:24:28 IST Report Abuse
Karam chand Gandhi ஒரு நல்ல தலைவனை 110 கோடியில் கண்டுபிடிக்க முடியாத அவல இந்தியாவில் மட்டும் தான் பார்க்க முடியும். இந்தியர்கள் மனிதர்களாக வாழ தகுதி இருக்கிறதா என்பதை இது போன்ற நிகழ்வுகளில் ஆராய பட வேண்டிய ஒன்று....
Rate this:
Share this comment
Cancel
25-டிச-201206:57:54 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் உண்மையில் அரிசன ஆலய நுழைவின் முக்கிய தலைவர்கள் மதுரை வைத்தியநாதய்யர். மற்றும் ராஜாஜி எனும் ராஜகோபாலச்சாரி , காமராஜரின் குருவான தீரர் சத்தியமூர்த்தி அய்யர் முதலியோர் ஊரே சேர்ந்து அவர்களை தீண்டத்தகாதவர்களாக அறிவித்தபோதும் கலங்காமல் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் கோவில் போன்ற பல ஆலயங்களில் தாழ்த்தப்பட்டோர் அமைதியான முறையில் நுழைந்து வழிபட வழி வகுத்து தலைமைதாங்கினர் இவர்களது சேவையால் உந்தப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரும் , தலித்துக்கள் பூசாரியாக இருக்கும் ஆலயங்களுக்குப் விஜயம் செய்து அவர்களிடம் பிரசாதம் வாங்கி கவுரவித்தார் இதுபோன்ற மாற்றங்கள் தி.கவால் ஏற்பட்டதல்ல.இவர்கள் ஆஷாடபூதிகள். வெளிவேஷக்காரர்களே ஆங்கிலேயரே வெளியேறவேண்டாம். எங்களை தொடர்ந்து அடிமைப்படுத்தி கொள்ளையடியுங்கள் என சொன்ன தேச துரோகக் கூட்டம்தான் .திராவிட இயக்கத்தின் எதிரியான காங்கிரசாவது ஒரு( தலித்) கக்கனை உள்துறை மந்திரியாக்கியது . இவர்களால் கடந்த 45 வருட திராவிடஆட்சியில் ஒரே ஒரு தலித்தை முதல்வராக இல்லாவிட்டாலும் உள்துறை மந்திரி அல்லது கட்சி தலைவராக ஆக்கினரா ? இவர்களை தலித்துக்கள் நம்பினால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமானம்.துரோகிகளை இனம் கண்டு ஒதுக்குங்கள்
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
25-டிச-201212:29:33 IST Report Abuse
Karam chand Gandhi சம்பந்தமில்லாமல் பேசி பிரசினையை திசை திருப்ப முயற்சிக்கிறீர் தலித்களை கோவிலில் நுழைய விடுவீர்களா? மாட்டீர்களா? இதற்கு பதில் தேவை. சாதீயத்தை ஒழிக்க இன்னும் கடுமையான சட்டங்கள் தேவை. இது போன்ற கோவில்களை அரசாங்கம் எடுத்து கொள்ள வேண்டும்? ஏன் காலதாமதம்?...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
25-டிச-201206:55:13 IST Report Abuse
ஆரூர் ரங கடவுள் நம்பிக்கையிலாதவர்களுக்கு கோவில்களில் யார் அர்ச்சனை செய்தால் என்ன? எந்த மொழியில் அர்ச்சனை நடத்தினால் என்ன கவலை? பெரியார் பிரச்சாரத்தின் விளைவு என்ன? அப்போதிருந்ததைவிட அதிக புதிய கோவில்கள் , கும்பாபிஷேகங்கள். திருவிழாக்கள் ,அவரது முக்கிய சீடர்களின் குடும்பத்தினர்களே கோவில் கோவிலாக அலைந்து வேண்டிக்கொண்டு ஜாமீன் வாங்குகின்றனர்.அதாவவது அது தோற்றுப்போன கொள்கை ஆனால் பாவம் மிகப்பெரும்பாலான அர்ச்சகர் குடும்பங்களோ இன்னும் தட்டில் விழும் சில்லறைக் காசுகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தமுடியாமல் திணறுகின்றனர். அவர்களது அடுத்த தலைமுறையில் ஒரு பகுதி அந்தத் தொழிலே வேண்டாமென்று வேறு வேலை ஊர், வெளிநாடு என்று பறந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தமாதிரி அர்ச்சகர் வேலைக்கு , வெறும் தட்டில் விழும் சில்லறைக் காசுகளுக்காக வாழும் எளிய அர்ச்சகர் வேலைகேட்டு பல ஏமாளி தலித்துக்களின் வாழ்வை பலியிட திகவினர் முயற்சிக்கின்றனர். இது காலத்துக்கொவ்வாத கொள்கை காலத்துக்கொவ்வாத போராட்டம். சம்மனில்லாமல் ஆஜராகும் திகவினரை குண்டர் சட்டத்தில் உடனே உள்ளே போடுங்க அம்மா. இல்லையெனில் இனக் கலவரமாக மாறும் மோசமான வாய்ப்புண்டு .நாட்டில் சமாதானமே மேலோங்கட்டும்
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
25-டிச-201212:33:02 IST Report Abuse
Karam chand Gandhi சரியாக சொல்லும் சுத்தாமல் சாதீயம் காக்கப்பட வேண்டும் அது தானே இதுக்கு தி. க. தேவையில்லை. நீங்களே அவர்களை அனுமதித்தால் என்ன? இந்தியாவை விட கேவலமாக எங்கும் சாதீயம் இருக்காது....
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
25-டிச-201206:03:58 IST Report Abuse
Guru இந்து மதத்தை தவிர மற்றவர்களிடம் நாத்திகம் பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
25-டிச-201212:37:11 IST Report Abuse
Karam chand Gandhi இந்து மதம் மட்டுமே சாதீய கட்டமைப்பை அதிகம் காக்கிறது மற்றும் சக மனிதனை சூத்திரன் என அவமதிக்கிறது. உலகத்தில் எந்த மதத்திலும் ஏற்ற தாழ்வு இருக்கலாம், ஆனால் கோயில் நுழைவு எங்குமே தடுக்கப்பட்டதில்லை இனத்திற்காக சாதிக்காக...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை