திரிசூலம்: டில்லியில் நிலவி வரும்,கடும் பனிமூட்டம் காரணமாக,நேற்று, சென்னையில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விமானங்கள் தாமதம் குறித்து,முறையான தகவல் இல்லாததால், பயணிகள் அவதிப்பட்டனர். டில்லியில், கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், டில்லியில் இருந்து,நேற்று காலை, 9:30 மணிக்கு, சென்னை வரும்"ஜெட்' ஏர்வேஸ் விமானம், மதியம், 1:00 மணிக்கும், காலை 9.45 மணிக்கு, வரும் ஏர் இந்தியா, "ட்ரீம் லைனர்' மாலை, 3:00 மணிக்கும், பகல் 1:00 மணிக்கு, வரும் ஏர் இந்தியா விமானம் மாலை 5:30 மணிக்கும், சென்னை வரும் என, அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து டில்லி, மும்பை, புனே, அந்தமான், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள், பல மணிநேரம் தாமதமாக புறப்படும் என, அறிவிக்கப்பட்டது. நேற்று காலை, 10:30 மணிக்கு, டில்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவத், விமான நிலையம் வந்தார். விமானம் பலமணி நேரம் தாமதம் என்றதும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். சென்னையில், நேற்று பல விமானங்கள் பலமணிநேரம் தாமதம் என்ற நிலையில், போர்டிகோ பகுதியில் உள்ள, தகவல் பலகையில், அனைத்து விமானங்களும் குறித்த நேரம் என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், பயணிகளை வரவேற்க வந்தவர்கள், தங்களது உறவினர்கள், நண்பர்கள், குறித்த நேரத்திற்கு வருகின்றனர்; என, விமான நிலையத்தில் காத்திருந்தனர். வெகுநேரம் ஆகியும், எதிர்பார்த்தவர்கள் வராத நிலையில், இது குறித்து, விமான நிலைய மேலாளரிடம், கேள்வி எழுப்பினர். பின், தகவல் பலகையில் மாற்றம் செய்யப்பட்டது.இதற்கு, ஊழியர்களின் அலட்சியம் காரணமா அல்லது தகவல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா என, பயணிகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை. இதனால், பயணிகள், வரவேற்க வந்தவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.