தாண்டிக்குடி: தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நோய் தாக்குதலை தடுக்க, மலைவாழை கன்றுகள், நிழல் வலையில் பராமரிக்கப்படுகின்றன. திண்டுக்கல், தாண்டிக்குடி கீழ்பழநி மலைப்பகுதிகள் மற்றும் சிறுமலையில் மலைவாழை அதிகளவு விளைகிறது. மருத்துவ குணம், சர்க்கரை சத்து குறைவுடன், நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்திருப்பதால், சந்தையில் கிராக்கி பெற்றுள்ளது. நோய் தாக்குதல் அதிகரிப்பால், உற்பத்தி குறைந்து விவசாயிகள் பாதித்தனர். முடிக்கொத்து நோய் தாக்குதல் அதிகரிப்பதால், இதை கட்டுப்படுத்த, தோட்டக்கலைத் துறையினரும், விவசாயிகளும் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில், 2009ல் விருப்பாட்சி மலைவாழை கன்றுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கன்றுகள் உற்பத்தி செய்ய, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, பூச்சி நுழைய முடியாத நிழல் வலைகள் அமைத்து பராமரித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆய்வு முடிவுற்று, நோய் தாக்குதலற்ற கன்றுகள் மற்றும் திசு கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஆனந்தன் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக, முடிக்கொத்து நோய் தாக்குதலற்ற மலை வாழை ஆய்வு நடந்து வருகிறது. கன்றுகள், திசு வாழை கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது, வாழை கன்றுகள் 25 ரூபாய்க்கும், திசு கன்றுகள் 50 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. விவசாயிகள், தடிய ன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம். போன் எண்: 04542-224 225. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.