திருப்பாச்சேத்தி: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கானூர் அரசு நடுநிலைப்பள்ளியில், கொதிக்கும் சாம்பாரில் விழுந்த முதல் வகுப்பு மாணவி நூபுரகங்கா தேவி படுகாயமடைந்தார். இப்பள்ளியில் 200 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கிருந்த சத்துணவு கூடம் இடிந்து விழுந்ததால், திறந்தவெளியில் சமையல் செய்கின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு, சாப் பாட்டு நேரத்தில் வகுப்பு முடிந்து, மாணவிகள் கூட்டமாக வெளியேறினர். அப்போது, முதல் வகுப்பு மாணவி நூபுரகங்கா தேவி, கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து விட்டார். அவரது உடலின் பின்பகுதி வெந்து விட்டது. அவர் படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கோமளவேணி கூறுகையில், "" அரசு பள்ளிகளில் குழந்தைகளை அமரவைத்து தான், மதிய உணவு தருவோம். கானூர் பள்ளியில் வரிசையில் நிற்க செய்து வழங்கியபோது, ஒருவரை ஒருவர் தள்ளியதால், கொதிக்கும் சாம்பாரில் விழுந்துவிட்ட மாணவி நூர்புர கங்காதேவிக்கு, காயம் ஏற்பட்டது. கவன குறைவாகவும், இது பற்றி தகவல் தெரிவிக்காமலும் இருந்த தலைமை ஆசிரியை மகேஸ்வரி மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்,'' என்றார். படமாத்தூர், சக்தி சர்க்கரை ஆலை மருத்துவமனை ஊழியர் கூறுகையில்,"" உடலில் காயத்துடன் வந்த, மாணவிக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், தொடர் சிகிச்சை அளிக்கிறோம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.