திருநெல்வேலி: வனப்பகுதியில் மான்வேட்டையில் ஈடுபட்ட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி, போலீஸ் அதிகாரி ஒருவருக்கு சொந்தமானதால், விசாரணையில் மந்தம் ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின், மேற்குதொடர்ச்சி மலையில் மான், யானை தந்தம்வேட்டை தொடர்ந்து நடக்கிறது. ஆனால், வனத்துறையினர் கண்டு கொள்ளாததால், குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர். நேற்றுமுன்தினம், இரவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, 13 பேர், இரண்டு கார்களில், மிளா மான்வேட்டைக்கு சென்றனர். மாலையில், திருக்குறுங்குடி வனப்பகுதியை ஒட்டியுள்ள, ஒரு பிரமுகரது தோப்பில் தங்கி, மது பானங்களுடன் ஜாலியாக இருந்தனர். இரவு, 7:00 மணிக்கு மேல், திருக்குறுங்குடி வனப்பகுதியில், வேட்டைக்கு சென்றனர். நள்ளிரவில் ஊர் திரும்பினர். திருக்குறுங்குடியில் இரவு ரோந்து வந்த போலீசார், இரண்டு கார்களையும் நிறுத்தினர். அதில், ஒரு இன்னோவா காரில் இருந்தவர்கள், போதையில் இருந்ததோடு, தாங்கள் போலீஸ் அதிகாரி ஒருவரின் உறவினர்கள் என கூறினர். போலீசார் சோதனையிட்டபோது, காருக்குள் இரட்டைக்குழல் துப்பாக்கி இருந்ததால், காரை திருக்குறுங்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். போலீஸ் அதிகாரிக்கு தொடர்புடையவர்கள் என தெரிய வந்ததால், அவர்களை திருக்குறுங்குடியில் இருந்து, மூன்றடைப்பு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். வேட்டையில் ஈடுபட்ட, ஐந்து பேர், கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த, இங்கிலாந்தில் தயாரான இரட்டை குழல் துப்பாக்கியும், இன்னோவா கார் ஆகியனவும், பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கார், குமரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவரின் தம்பியின் கார் எனவும் தெரிவித்தனர்.
அதிகாரி சிக்கினார்மிளா மான்வேட்டையில் ஈடுபட்டவர்கள் தந்த தகவல்படி, அந்த துப்பாக்கி, போலீஸ் அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது என கூறினர். இருப்பினும், விசாரணை அதிகாரிகள் அதை ஊர்ஜிதப்படுத்தவில்லை. நேற்று முன்தினம் இரவில் நடந்த சம்பவம் குறித்து, நேற்று இரவு வரை, போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்தனர். மூன்றடைப்பு போலீஸ் ஸ்டேஷனில், நேற்று காலையில் இருந்தே, பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனாலும் வனக்குற்றவாளிகளை படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஒரு காரில் சிக்கிய ஐந்துபேர் தவிர, இன்னொரு காரில் ஒரு திருமணமகால் உரிமையாளர், ஒரு செங்கல்சூளை அதிபர், எம்.எல்.ஏ.,வின் தம்பி ஆகியோர் தப்பியுள்ளனர். அவர்களை கைது செய்யவும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நெல்லை மாவட்டம் நாங்குநேரி வனப்பகுதியில், சில மாதங்களுக்கு முன், முயல் வேட்டைக்கு சென்ற சப் - இன்ஸ்பெக்டர் அசோகன் என்பவர், இரவில் கைது செய்யப்பட்டார். தற்போது, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், மான்வேட்டையில் ஈடுபட்டுள்ள போதும், அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காப்பாற்ற, போலீஸ் அதிகாரிகள் பகீரத முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.