திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை தாக்கிய இருவரை, போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாநகராட்சியில், சுகாதார ஆய்வாளராக பணிபுரிபவர் முரளிகண்ணன், 42. நேற்று முன்தினம் இரவு, நண்பர் சாமிதுரையுடன், திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையத்தில் உள்ள ஓட்டலுக்கு உணவருந்த சென்றார். அங்கு வந்த மூவர், முரளிகண்ணனை தாக்கி விட்டு தப்பினர். காயமடைந்த இவர், திருப்பூர் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமார், முத்து ஆகியோரை கைது செய்தனர்; ஒருவரை தேடுகின்றனர். கமிஷனர் செல்வராஜிடம் கேட்டபோது, ""மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது, மாநகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, எஸ்.பி.,யிடம் கேட்டுள்ளோம். இதுபோன்ற சம்பவம், இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.