சென்னை: வேலூர் மாவட்டத்தில், ரயில் பாதைக்காக, விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்ததை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. வேலூர் மாவட்டம், வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த, விவசாயிகள், 11 பேர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: திண்டிவனம் - நகரி இடையில், வேப்பூர் கிராமத்தில், அகல ரயில் பாதை அமைக்க, நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. வேப்பூரில், பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. அதற்கு, இடையூறு இல்லாமல், ஏற்கனவே திட்டமிட்டிருந்த பாதை மாற்றப்பட்டு, ரயில்வே பாதையில், வளைவு ஏற்படும் வகையில் அமைக்கப்படுகிறது. மாற்றப்பட்ட திட்டத்தால், பொன்னியம்மன் கோவில், விநாயகர் கோவில், மருத்துவமனை, பள்ளி கட்டடங்கள், குடியிருப்புகள், இடிக்கப்படும் நிலை உள்ளது. விவசாய நிலங்களை, ஆர்ஜிதம் செய்வது சரியல்ல. பாசனம் செய்யப்படாத நிலங்கள்,போதுமானதாக உள்ளது.பொழுதுபோக்கு பூங்கா உரிமையாளருக்கு, உதவும் வகையில்,எங்கள் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுகிறது.வேலூர் கலெக்டரின் பரிந்துரையை, பரிசீலிக்கவில்லை. எனவே, நில ஆர்ஜிதம் செய்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: பொழுதுபோக்கு பூங்காவின் வசதிக்காக, பழைய திட்டம் மாற்றப்பட்டதாக, மனுதாரர்கள் கூறியுள்ளனர். நோட்டீஸ் அனுப்பியும், பூங்கா சார்பில்,யாரும் ஆஜராகவில்லை. ஆற்காட்டை சேர்ந்த, எஸ்.பி.ஷா என்பவரின் நிலத்தில், பொழுதுபோக்கு பூங்கா இயங்குகிறது. "உரிய நஷ்டஈடு வழங்கும் பட்சத்தில், இடத்தை ஆர்ஜிதம் செய்ய ஆட்சேபனையில்லை' என, ஷா கூறியுள்ளார். ரயில்வே பாதையின் வரைபடத்தை ஆராய்ந்த போது, அதில், வளைவு இருப்பது தெரிகிறது. இதற்கு, திருப்திகரமான விளக்கத்தை அரசால் தர முடியவில்லை. பொழுதுபோக்கு பூங்காவுக்காக, ரயில் பாதை வளைந்து வருமாறு அமைக்கப்படுகிறது என, மனுதாரர்கள் தரப்பில் கூறுவதை, ஒதுக்கி விட முடியாது. சரியாக, பரிசீலிக்காமல், நில ஆர்ஜிதத்துக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்கள், விவசாய நிலங்கள். தமிழக அரசின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.