வாஷிங்டன்; மது அருந்திவிட்டு, கார் ஓட்டிய அமெரிக்க எதிர்க்கட்சி எம்.பி., கைது செய்யப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த, மேல்சபை எம்.பி., மைக்கேல் கிராப்போ. இடாகோ என்ற இடத்திலிருந்து, வாஷிங்டன் நோக்கி காரில் வந்தபோது, விர்ஜினியா மாகாண போலீசார், இவரது காரை தடுத்து நிறுத்தி பரிசோதித்தனர்.பரிசோதனையில், இவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, போலீசார் இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 50 ஆயிரம் ரூபாய் சொந்த ரொக்க ஜாமினில், இவர் விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது."மது அருந்திவிட்டு, கார் ஓட்டியது தவறு தான், இதற்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அபராதமாக செலுத்த தயாராக உள்ளேன்' என, மைக்கேல் மன்னிப்பு கேட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.