புதுடில்லி: "குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில், வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது' என, "டிவி' சேனல்களுக்கு, ஒளிபரப்பு குறை தீர்வு கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது.
"டிவி' சேனல்களில், நெடுந்தொடர்கள் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு; ரியாலிட்டி ஷோ என்ற பெயரில், பங்கேற்பவர்களை வேதனைப்படுத்துவது என, விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. பொழுது போக்கு சேனல்களில், குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், குழந்தைகளின் வயதுக்கு மீறிய நடவடிக்கைகளில், ஈடுபடுவது போல் காட்சிகள் வருவது கவலையளிக்கிறது.வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டு, காதல் பாட்டுக்கு நடனம் ஆடுவது, பாட்டுப் பாடுவது போன்றவற்றில் பங்கேற்கச் செய்கின்றனர்.
பெரியவர்களுக்குரிய பாடலையும், நடனத்தையும் அதே போன்றே குழந்தைகள் பாடுவதும், ஆடுவதும் கவலையளிக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் சேனல்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு சார்பில், மத்திய அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.இது போன்ற புகார்களை களைவதற்காகவும், சேனல்களில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் என்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காகவும், ஒளிபரப்பு தொடர்பான குறைகள் தீர்வு கவுன்சில் அமைக்கப்பட்டது.
அனைத்து சேனல்கள் உறுப்பினர்களாக உள்ள, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டது தான் இந்த கவுன்சில். இந்த கவுன்சில், அனைத்து பொழுது போக்கு சேனல்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில், குறிப்பாக, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், வயதுக்கு மீறிய செயல்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தோர் சம்பந்தப்பட்ட பாடல், ஆடல் காட்சிகளை போல், பிரதிபலிக்கும் வகையில் குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.
காதல் பாடல், குத்துப் பாட்டு போன்றவற்றில் குழந்தைகள் ஆடுவதையோ, பாடுவதையோ அனுமதிக்கக் கூடாது. பெரியவர்களை போன்று, குழந்தைகள் உடைகளை அணிவது, ஒப்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.வயது வந்தோர் மட்டுமே பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகளில், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மன பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் அவர்களின் தன்னம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ரியாலிட்டி ஷோக்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் படிப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்களின் மன நலம், உடல் நலம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, "டிவி' சேனல்களுக்கு, கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பெண் குழந்தைகள், சிறுவர்கள் பார்த்து/கேட்டு குட்டிசுவர் ஆவதற்கு வேண்டிய அனைத்து பாதிப்புகளையும் செய்தாகிவிட்டது மானாட மயிலாட தேனாட நீயாட போன்ற நிகழ்சிகளில் குழந்தைகளை ஆட வைத்தும் பாட வைத்தும் உன் chemistry நன்றாக வொர்க் அவுட் ஆகிறது நல்ல energy உனக்கு உள்ளது போன்ற கண்றாவி கமெண்ட் களும், ஜிஞ்சினாக்கடி நீதிபதிகள் என்ற பெயரில் கூத்தாடிகள் கொடுக்கும் சான்றுகளும் பார்த்து பார்த்து இளம் உள்ளங்கள் ஏற்கனவே சீரழிந்துவிட்டன. அரசு இனி எடுக்கப்போகும் நடவடிக்கை எல்லாம் வெறும் கண் துடைப்பே. உரிய காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து குழந்தைகளை வழி நடத்தாவிட்டால் வரும் விளைவுகளை அவர்கள் சந்தித்துதான் ஆகவேண்டும்.
நான் சென்ற 30 ஆண்டுகளாக u s ல் வாழ்பவன். சென்ற பத்து வருஷங்களில் தமிழ் சேனல் களை கூடுதல் கட்டணம் செலுத்தி டிவி ல் பார்த்து வருகிறேன். சன், ஜெயா, விஜய் ஒளி பரப்புகளில் காட்டப்படும் பல adult only விஷயங்களை இங்குள்ள abc , cbs , nbc போன்ற chanel களில் ஒளி பரப்ப இன்னமும் தயக்கம் இருக்கிறது. ஆண்மைக்குறைவு, தாயத்து, மூலிகை மருத்துவம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை ஜெயா டிவி ல் காட்டுமுன் அவற்றிற்கு ஜெயா டிவி பொறுப்பேற்காது என்று காட்டுவதில் எவ்வளவு பொறுப்பின்மை என்று தெரியவில்லை. இந்தியாவில் அனுபவிக்கப்படும் உண்மையான சுதந்திரம் இதில்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது
அருண் சேகர்
அதே போல இந்த சன் டிவியில் சினிமா தொடர்பான நிகழ்சிகள் தான் ஏராளம். வரவர எல்லா நிகழ்சிகளுமே திரைப்படம் தொடர்பான நிகழ்சிகளாகி விட்டது அதில். இதை பார்த்தால் சினிமா தவிர வேறு பொழுது போக்கே இல்லை என்பது போல ஆகிவிடும். இந்த தொலைகாட்சியில் குட்டீஸ் என்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு முதலிலேயே சொல்லி கொடுத்து நிவழ்சியில் பங்கேற்க வைக்கிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது/ அந்த அளவுக்கு குழந்தைகள் அவர்கள் இயல்பை மீறி பேசுகின்றன. . இவை எல்லாமே கட்டுபடுத்தப்பட வேண்டும். அதுவுமில்லாமல் தொலைக்காட்சி ஒலிபரப்பு நேரத்திலும் கட்டுப்பாடு வேண்டும். இரவு பதினொரு மணிக்கு மேல் தொலைக்காட்சி ஒலிபரப்பு கூடாது என்ற சட்டம் வேண்டும். மற்ற நாடுகளில் அவர்கள் நேரத்திற்கேற்ப தெரிய வேண்டுமே என்று நினைப்பவர்கள் அதற்கான தொழில் நுட்பம் உபயோகிக்கலாம். இந்த 24 மணி நேர சேனல்கள் தான் நமக்கு பிடித்த கேடு.
அதே போல, இரவு 11 மணிக்கு மேல் ஓளி பரப்பாகும் ஆண்மை குறைவு, தாம்பத்ய உறவில் முழு திருப்தி, ஆண்மையை அதிகரிக்க, போன்றவை குறித்து வரும் நிகழ்சிகள் முற்றாக தடை செய்ய படல் வேண்டும். அதுவும் ஒரு sexy - யாக இருக்கும் ஒரு பெண்ணை? உட்கார வைத்து கொண்டு அடிக்கும் லூட்டி மகா மட்டம். 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சி பார்க்கும் போது ஒரு செக்ஸ் படம் பார்த்த பீலிங் தோன்றுகிறது. வயதானவர்களுக்கே இந்த நிலைமை என்றால் இளைஞர்களுக்கு எப்படி இருக்கும்? Dr . காமராஜ் - ன் நிகழ்ச்சியும் தேவை இல்லாத ஒன்று. அவர் தரும் அறிவுரைகள் இல்லாமல் தான் நம் முன்னோர்கள் வெற்றிகரமாக வாழ முடியவில்லையா? ( அவர்கள் காலத்தில் பாலியல் குற்றங்கள் குறைவாகவே இருந்தன). பல நகர வீடுகளில் பெரியவர்கள் சீக்கிரமே உறங்க போய் விடுகிறார்கள். 10-15 வயது பிள்ளைகள் தான் இரவு 12 -1 மணி வரை விழித்திருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் இந்த நிகழ்சிகளை பார்ப்பார்கள். ஒரு சேனல் என்றால் பரவாயில்லை. வரிசையாக எல்லா சேனல்களுமே இது போன்ற நிகழ்சிகள் தான். அரசு இதை கவனிக்குமா?
தனியார் தொலைக்காட்சியில் வரும் அபத்தமான தொலைகாட்சி தொடர்கள் ,மெகா தொடர்கள் பல குடும்பத்தின் நிம்மதியை தொலைக்கின்றன .மிக சிறந்த துல்லியமான ஒளிபரப்பை பல நாடுகளில் தந்து கொண்டு இருக்கும் சூரியனின் பெயரை கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சியின் மிக முக்கிய வேலையே பல பெண்களை மூளைச் சலவை செய்து தனது அபத்தமான மெகா மகா தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமை ஆக்கி அவர்களின் பொன்னான நேரத்தை விழுங்கி குட்டிச்சுவர் ஆக்குவதுதான் .
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
சினிமாவுக்கு எப்படி தணிக்கை இருக்குதோ அப்படி டிவி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை கண்டிப்பாக தேவை. ஆபாசம், பழிவாங்குதல், சண்டை இதை மட்டும்தானே இன்றைய டிவி நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. இதை பார்த்து வளரும் குழந்தைகளின் மனது கண்டிப்பாக கெடும். கடுமையான தணிக்கைக்கு டிவி நிகழ்ச்சிகள், நாடகங்கள் அனைத்தையும் உட்படுத்த வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.