Advertisement
கரிய மலையில் ஐயப்பன் கோவில் ரூ.50 லட்சத்தில் பணிகள் ஜரூர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

மஞ்சூர் : மஞ்சூர் அருகே கரியமலையில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஐயப்பன் கோவில் திருப்பணிகள் விரைவாக நடந்து வருகிறது.மஞ்சூரில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் ஐயப்பன் விளக்கு பூஜை, அனைத்து தரப்பு மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மஞ்சூர் பஜாரில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் விளக்கு பூஜை நடந்து வருகிறது. ஸ்ரீ ஐயப்பன் பக்த கோடி குழுவினர், ஐயப்பன் கோவில் கட்ட திட்டமிட்டனர். இதற்காக அனைத்து தரப்பினரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. கோவில் கட்ட முடிவெடுக்கப்பட்டதை அடுத்து, கரியமலை சாலையில் 17.25 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது. கடந்தாண்டு கோவில் திருப்பணிகள் துவக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோவில் தோற்றத்தை போல் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கோவில் திருப்பணிக்கு அனைத்து தரப்பினரும் நிதி, பொருளுதவி செய்துள்ளனர். தற்போது கோவில் திருப்பணிகள் முடிவடையும் தருவாயில், வரும் மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்துள்ளனர். மஞ்சூரில் நடப்பாண்டுக்கான 49ம் ஆண்டு ஐயப்பன் விளக்கு பூஜை 26ம் தேதி நடக்கிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.