கூடலூர்: சபரிமலைக்கு அதிகளவில் வந்த அய்யப்ப பக்தர்களின் வாகனங்களால், குமுளி மலைப் பாதையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள், ஏழு மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றன. சபரிமலையில் நாளை (டிச., 26) மண்டல பூஜை நடக்கிறது. இதற்காக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், குமுளி வழியாகச் செல்கின்றனர். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, கூடுதலாக வந்த பக்தர்களின் வாகனங்கள், குமுளி மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, ஆங்காங்கே நின்றன. பல இடங்களில் மிகக் குறுகலாகவும், ஆபத்தான வளைவுகளையும் கொண்ட, குமுளி மலைப் பாதையில், வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல், நெரிசலில் சிக்கின. இதனால், லோயர்கேம்பில், ஏராளமான வாகனங்கள், ஏழு மணி நேரம் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன. காலை, 10:00 மணிக்கு மேல், போக்குவரத்து சீரானது.
பக்தர் பலிஓசூரிலில் இருந்து, சபரிமலைக்கு வந்த, அய்யப்ப பக்தர்களின் கார், குமுளி மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சிக்கியிருந்த போது, 52 வயதான ஒரு பக்தருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. உடன் வந்த பக்தர்கள், ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனமும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனால், இரண்டு மணி நேரத்திற்கு பிறகே, லோயர்கேம்பில் இருந்து அந்த பக்தரை, கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது. அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இறந்தவரின் உடலை, உடன் வந்த பக்தர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருந்திருந்தால், அந்த பக்தரை காப்பாற்றி இருக்கலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.