Petrol thrown on Dindigul coucilor | திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலரை பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயற்சி: போலீசார் விசாரணை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலரை பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயற்சி: போலீசார் விசாரணை

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்: பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி மீது, பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தாக கூறப்பட்ட தகவலையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். இந்த ஆண்டு துவக்கத்தில், திண்டுக்கல்லில் தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில், திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதான இவர், குண்டர் சட்டத்தை ரத்து செய்து வெளியில் உள்ளார்.
குண்டு வீச்சு?:நேற்று மாலை, 6:45 மணிக்கு, திண்டுக்கல் ஸ்கீம் ரோட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு, முத்துப்பாண்டி காரில் வந்தபோது, சிலர் கார் மீது குண்டு வீசி கொல்ல முயன்றதாகவும், முத்துப்பாண்டி தப்பிச்சென்றதாகவும் தகவல் பரவியது. டி.எஸ்.பி., சுருளிராஜா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, பொன்னிவளவன், பிரபாகரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்தில் ஆஜராகினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இல்லை: குண்டுவீச்சு சம்பவம் நடந்ததிற்கான முகாந்திரம் இல்லை என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பக்கத்து கடைக்காரர்களிடம் விசாரித்த போது அவர்கள், "எங்களுக்கு எதுவும் தெரியவில்லை' என்றே தகவல் கூறியுள்ளனர். போலீசார் கூறுகையில், "சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் தடயங்கள் எதுவும் இல்லை. இது ஒரு நாடகமாக இருக்கலாமோ எனவும் சந்தேகிக்க தோன்றுகிறது. இருந்தபோதிலும் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை