ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்த ஜலால் என்பவரை போலீசார் கைது செய்து, ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தல், "நெட்வொர்க்' தலைவன் சுரேஷை தேடி வருகின்றனர். ராமநாதபுரம், ஓம்சக்தி நகரில், ஒரு வீட்டில் மொத்தமாக வந்த கஞ்சாவை சில்லரை வியாபாரத்திற்காக பொட்டலம் போடுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கேணிக்கரை போலீசார் சோதனை மேற்கொண்டதில் அங்கு, ஏழு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ராமநாதபுரம் அண்ணா நகரை சேர்ந்த ஜலால், 37, என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கஞ்சா கடத்தல், "நெட்வொர்க்'கின் தலைவன் சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.