திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே, கோவின் கதவை உடைத்து சிலை, நகைகள் திருடப்பட்டு உள்ளன. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த, நாயனூர் காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 22ம் தேதி இரவு, கோவில் பூசாரி வெங்கடேசன், 28, பூஜையை முடித்துவிட்டு, வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை, 6:00 மணிக்கு, வழக்கமாக கோவிலை திறக்க வந்தபோது, கதவு திறக்கப் பட்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டார். தகவலறிந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு, கோவிலுக்குள் சென்று பார்த்த போது, 2 அடி உயரமுள்ள, ஐம்பொன் விநாயகர் சிலை, இரண்டு சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன. இதுபற்றி, கோவில் பூசாரி வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.