Danger for Ice cream eating childrens | ஐஸ் கிரீம், நூடுல்ஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆபத்து:சயனைடு விஷம் கலந்த "ஸ்டார்ச்' மாவு கலப்பு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (11)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஐஸ் கிரீம்களில், "கிரீம்' அதிகமாக இருப்பதற்காகவும், நூடுல்ஸ்களில் நெகிழ்வுத் தன்மை இருப்பதற்காகவும், அதில், "சயனைடு' ஸ்டார்ச் மாவு கலக்கப்படுவதால், அதைச் சாப்பிடும் குழந்தைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தான், மரவள்ளிக் கிழங்கில் இருந்து, "ஸ்டார்ச்' மற்றும் ஜவ்வரிசி தயாரிக்கும் சேகோ தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. மரவள்ளிக் கிழங்கை அரைத்துத் தயாரிக்கப்படும், "ஸ்டார்ச்' எனப்படும், கிழங்கு மாவு, பேப்பர் கூழ், பசை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.மரவள்ளிக் கிழங்கில், தோல் நீக்கிய பின்பே மாவு தயாரிக்க வேண்டும். பெரும்பாலான ஆலைகள், தோலை நீக்காமலேயே, "ஸ்டார்ச்' தயாரிக்கின்றன.
வியாபாரிகள் பலர், தோல் கலந்த, "ஸ்டார்ச்'சை வாங்கி, குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலக்கின்றனர். "சயனைடு' என்பது கொடிய விஷம். இதன் வீரியத்தைக் குறைத்து, "ஸ்டார்ச்' மாவில் கலக்கின்றனர். அந்த உணவைச் சாப்பிடும் குழந்தைகள் கடுமையாகப்

பாதிக்கின்றனர்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:"ஸ்டார்ச்'சை பேப்பர் கூழ், பசை தயாரிப்புக்காக விற்பனை செய்கிறோம் என, சேகோ ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆனால், வெளி மார்க்கெட்டில் வியாபாரிகள் தோல் கலந்த, "ஸ்டார்ச்'சை கொள்முதல் செய்து, சில ஐஸ் கிரீம், நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். பால் மூலம், "கிரீம்' உற்பத்தி செய்ய செலவு அதிகமாகும். அதற்குப் பதிலாக, "ஸ்டார்ச்' மாவு கலப்பதால், குறைந்த செலவில், "கிரீம்' அதிகமாகக் கிடைக்கும். இதனால், சில தயாரிப்பாளர்கள், ஐஸ் கிரீமில், "ஸ்டார்ச்' கலக்கின்றனர்.குழந்தைகள் பாக்கெட்டுகளில் அடைத்த நூடுல்ஸ்களை விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். இந்த நூடுல்ஸ்களில் நெகிழ்வுத் தன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட அளவில், "ஸ்டார்ச்' கலக்கப்படுகிறது.சில்லி சிக்கன், மீன் வருவல் ஆகியவற்றிலும் மசாலா பிடிக்க வேண்டும், மொறுமொறு தன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக,

Advertisement

குறிப்பிட்ட அளவில், "ஸ்டார்ச்' கலக்கின்றனர். "ஸ்டார்ச்' தயாரிப்புக்காக, தோலுடன் கூடிய மரவள்ளிக் கிழங்கை அரைத்து உலர வைக்கும்போது, தோலில் காணப்படும், "சயனைடு' விஷத்தின் வீரியம் குறைந்து விடும். எனினும், முழுமையாகக் குறையாமல் ஓரளவு மாவில் கலந்திருக்கும் ."ஸ்டார்ச்' கலந்த நூடுல்ஸ், ஐஸ் கிரீம் சாப்பிடும் குழந்தைகள், குறுகிய காலத்தில் வயிற்று வலி, அல்சர் உட்பட பல்வேறு பாதிப்புக்கு ஆளாவர். நூடுல்ஸ் தயாரிக்கும் பெற்றோர்,நூடுல்சை பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொதிக்க வைத்த நீரில், 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின், வெந்நீரை கொட்டி விட்டு, நூடுல்சை எடுத்து வழக்கம் போல தயாரிக்க வேண்டும். ஐஸ் கிரீமை பொருத்தவரை, நுகர்வோர் விழிப்புடன் இருப்பது அவசியம்.உணவுப் பொருட்களில் சட்டவிரோதமாக, "ஸ்டார்ச்' கலக்கப்படுவதால், சேகோ ஆலைகளில் தோல் நீக்கிய மரவள்ளிக் கிழங்கில் இருந்து, "ஸ்டார்ச்' தயாரிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மீறி தயாரிக்கும் ஆலைகள் மீது, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அனுராதா கூறினார். - நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
31-டிச-201219:17:05 IST Report Abuse
JALRA JAYRAMAN மக்களுக்கு பயன் உள்ள தகவல் நன்றி, உணவு பொருள் தயாரிப்பாளர் காட்டில் மழை, சுகாதார துறைக்கு மர்மகாய்ச்சல்
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
26-டிச-201214:09:03 IST Report Abuse
Raj சட்டத்தையே மதிக்க மாட்டோம் நாங்க இதுல அறிவுரை சொல்லி திருந்தவா போறாங்க? யாரை காப்பாத்த இந்த நடவடிக்கை?
Rate this:
Share this comment
Cancel
Chandramouli, M.S. - Chennai,இந்தியா
25-டிச-201218:54:43 IST Report Abuse
Chandramouli, M.S. It is shocking to read this news. Children always like to eat both ice and noodles. It is the responsibility of the parents to inform the children about the side effect and not to take these items at least from now. Govt should take action to ban these items after careful examination.
Rate this:
Share this comment
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
25-டிச-201213:22:27 IST Report Abuse
Enrum anbudan இதை பற்றி theriyamalaaaaa இருக்கும் நம்ம சுகாதார துறைக்கு............என்னமோ போங்க.
Rate this:
Share this comment
Cancel
manal sharqia - TelAviv,இஸ்ரேல்
25-டிச-201212:02:56 IST Report Abuse
manal sharqia வேலி மரவள்ளி யில் முழுக்க் முழுக்க சயனைடு உள்ளது என்பது அனைவரும், அறிவர்,, தீனி மரவள்ளி தோலில் சயனைட் என்பது வியப்பாக உள்ளது,, மைதாவின் மூலப்பொருள் மரவள்ளி.. எப்படி உயிர் வாழ்வது?
Rate this:
Share this comment
Cancel
mohan - kumbakonam,இந்தியா
25-டிச-201210:25:59 IST Report Abuse
mohan நம் நாட்டில் உணவு பொருள் தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது ,லாபம் ஒன்றுதான் தாரக மந்திரம் .யாரும் சுகாதாரத்தை பற்றி கவலைப்படுவது இல்லை .
Rate this:
Share this comment
Cancel
natesan.murugan - coimbatore,இந்தியா
25-டிச-201209:16:39 IST Report Abuse
natesan.murugan தினமலரின் "நமது சிறப்பு நிருபர்'' அவர்களே தங்கள் கொண்டுவந்த செய்தி இந்திய நாட்டு மக்களுக்கு (consumers ) மிகவும் பயனுள்ள செய்தி ,உங்களிடமிருந்து மேலும் சில குறிப்புகளை எதிர்பார்கிறேன் அதாவது தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த உணவுப் பொருளில் "சயனைடு' அல்லது மற்ற விஷத்தின் தன்மையை எவ்வாறு கண்டறிவது என்பதை நிறைய விவரித்து எழுதுங்கள் .............நன்றி
Rate this:
Share this comment
Cancel
BED BUG - doha,கத்தார்
25-டிச-201209:10:10 IST Report Abuse
BED BUG ஐஸ் கிரீம் நூடுல்ஸ் கலாச்சாரம் இந்திய மக்களையும் கெடுத்துக்கொண்டுள்ளது வேதனையான விஷயம். பெற்றோர்கள்தான் விழிப்புடன் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vasu Murari - Chennai ,இந்தியா
25-டிச-201207:27:34 IST Report Abuse
Vasu Murari இது போன்ற ஆபத்துகள் ஐஸ் கிரீம் மற்றும் நூடுல்ஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும்தானா அல்லது பெரியவர்களுக்குமா என்று செய்தியில் குறிப்பிடப்படவில்லை. அதையும் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும், சாலை ஓரத்தில் மரவள்ளிக்கிழங்கை ஆயாக்கள் வேகவைத்து (தோலுடன்) விற்கிறார்கள். அதைச் சாப்பிடலாமா? தமிழ் நாட்டைவிட அண்டை மாநிலமான கேரளாவில் இந்த ம.வ.கிழங்கு அதிக அளவில் உணவாகப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
25-டிச-201212:55:18 IST Report Abuse
LAXஅந்த கிழங்குகள், சோளக்கருதுகள் எந்த தண்ணீரில் வேக வைக்கப்படுகிறது என்பதும் மிக முக்கியம்.... அதுவும் சென்னையில்.......
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
25-டிச-201207:23:43 IST Report Abuse
Sami உணவே மருந்து என திருமூலர் கூறியிருக்கிறார். இங்கே நடப்பது உணவில் நஞ்சு. எங்கே செல்கிறோம், என்ன செய்கிறோம், என்ன நடக்கிறது, என்ன செய்யவேண்டும், என்ன வழி, இப்படி பல என்ன என்ன என்ன என கேள்விகள் கண்முன்னே இருக்க எதுவும் அறியாமல் எங்கோ எதையோ இலக்காக கொண்டு மனிதன் ஓடுகிறான். ஆபத்து முன்னரே கண்டால் நன்று, வந்தபின் வருந்துவது நம் அறிவு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.