ஸ்ரீநகர்: காஷ்மீரில், நேற்று நடந்த என்கவுன்டரில், இரண்டு பயங்கரவாதிகளும்,போலீஸ்காரர் ஒருவரும், உயிரிழந்தனர்.காஷ்மீரின், குல்காம் மாவட்டத்தில்உள்ள, தோதிபாரா என்ற கிராமத்தில்,பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்ப தாக, பாதுகாப்புப் படையினருக்கு, தகவல் கிடைத்தது. பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்த, பாதுகாப்புப் படையினர், அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.பயங்கரவாதிகளும், திருப்பிச் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே, துப்பாக்கிச் சண்டை நடந்தது.இந்த சண்டையில்,லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள்இருவரும், போலீஸ்காரர் ஒருவரும் உயிரிழந்ததாக,பாதுகாப்புப் படைவட்டாரங்கள் தெரிவித்தன. பயங்கரவாதிகளைதேடும் பணி, தொடர்ந்து நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.