திருமங்கலம்:மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நடை பயணம் மேற்கொண்டிருக்கும் வைகோ. இந்த நடை பயணம் விளம்பரத்திற்காகவோ கட்சியில் ஆட்கள்
சேர்ப்பதற்காகவோ அல்ல குடிபோதைக்கு வருங்கால தலைமுறையினர் அடிமையாகிவிடாமல் இருப்பதற்காகவே என திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசும் போது,"மதுவிலக்கு பிரச்சாரம் என்பதை நான் திடீரென எடுக்கவில்லை. கடந்த முறை 1700 கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்ட போது தமிழக இளைஞர்களை காப்பாற்ற மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் நலன் காக்க தென்னக நதிகளை இணைக்க வேண்டும். சாதிகள் பெயரால் சண்டைகள் நடைபெயராமல் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்தினேன்.
மக்களை மூடர்களாக? வெறியர்களாக மாற்றும் இந்த மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையை மட்டுமே வலியுறுத்தி நடந்து வருகிறேன். தற்போது மக்களை இந்த இயக்கத்திற்காக தயாராக்கும் வேலை நடந்து வருகிறது. மக்கள் அணி சேர்ந்த பின்னர் மதுவிற்கு எதிராக கிளர்ச்சி நடக்கும்' என்று பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.