மதுரை:மதுரை மாநகராட்சி 20வது வார்டு பாண்டியன்நகரில், தெருக்களில் ஓடும் கழிவுநீர், கால்வாயில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இந்த வார்டில் 8,599
வாக்காளர்கள் வசிக்கின்றனர். மண்டலம் 1ன் தலைவர்
ராஜபாண்டி(அ.தி.மு.க.,), வார்டு கவுன்சிலர். மக்கள் தொகையை விட, பாதிப்புகள் அதிகம். பாதாள சாக்கடை
கழிவுநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுவதால், சுகாதார
சீர்கேடு நிலவுகிறது.
நான்கு மாதங்களுக்கு முன் போடப்பட்ட சிமென்ட் ரோடு, அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து
விட்டது.
பல முறை முறையிட்டும், மாநகராட்சி அதிகாரிகள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர்
குழாயும், பாதாளச் சாக்கடை இணைப்பும் ஒன்றாக இருப்பதால், கழிவுநீர் கலக்கும் அவலம் நிலவுகிறது.
குப்பைத்தொட்டி இன்றி, அனுப்பானடி கால்வாயில்
குப்பையை கொட்டுகின்றனர். இதனால் கொசுதொல்லை அதிகம்.
அம்சு: பாதாளச்சாக்கடையால், ரோடுகள் தெரிவதில்லை. வீடு முன்பு, தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தெருவிளக்குகள் எரிவதில்லை. சேதமடைந்த குழாய் சரிசெய்யப்படவில்லை.
குப்பை தொட்டிகள் கூட இல்லை. கால்வாயை மூடும் அளவிற்கு, குப்பை தேங்கியுள்ளன.
காற்றை விட, துர்நாற்றத்தை தான் சுவாசிக்கிறோம்.
மாநகராட்சியில் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை.
மாநகராட்சி கவுன்சிலர் ராஜபாண்டி: அடிக்கடி சாக்கடை அடைப்பு ஏற்படுவது உண்மை தான். அவற்றை சரிசெய்ய தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அதிகாரிகள்
ஒத்துழைப்பு இல்லை. தெரிவிக்கும் புகார்களை,
செவி கொடுத்துக்கூட கேட்பதில்லை. வார்டில் அனைத்து
தேவைகளையும் பூர்த்து செய்வதில், ஆர்வம் காட்டுகிறேன். குறைகளை 93441 17544ல் தெரிவிக்கலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.