மதுரை: கேரளாவை சேர்ந்த ஒப்பந்ததாரருக்கு 3.99 கோடி ரூபாயை தருவதில் தாமதம் செய்யும், மதுரை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தர விட்டது. கோழிக்கோட்டை சேர்ந்த முகைதீன். இவர், திண்டுக்கல் மாவட்டம் கிருதுமால் நதியில் 3.55 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்ட பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தம் மேற்கொண்டார். பணியை முடித்த பின் தொகை வழங்கப்படவில்லை. பொதுப்பணித்துறை மீது தீர்ப்பாயத்தில் முகைதீன் வழக்கு தொடர்ந்தார். 18 சதவீதம் வட்டியுடன் தொகையை வழங்கும்படி தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பொதுப்பணித்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. விசாரணை நடத்திய கோர்ட் டிஸ்மிஸ் செய்தது. இதையடுத்து, ஐகோர்ட் கிளையில் பொதுப்பணித்துறை அப்பீல் வழக்கு தாக்கல் செய்தது. ஒன்பது சதவீதம் வட்டியுடன் 3.99 கோடி ரூபாயை முகைதீனுக்கு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. எனினும், தொகை வழங்கப்படவில்லை. பொதுப்பணித்துறைக்கு எதிராக மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் முகைதீன் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். பொதுப்பணித்துறை மதுரை தலைமை அலுவலகம் முழுவதையும் ஜப்தி செய்ய, நீதிபதி கோகுல்தாஸ் உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.