திருமங்கலம்: திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதற்காக நின்று கொண்டிருந்த லாரி மீது கப்பலூர் பாலத்தில் இருந்து இறங்கிய லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் மோதியது. இதில் பின்னால் வந்த லாரியின் டிரைவர், கிளீனர் காயமடைந்தனர். கரூரில் இருந்து சாத்தூருக்கு சிமென்ட் லோடு ஏற்றி வந்த லாரி திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதற்காக நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து குலசேகரத்திற்கு பழைய மரப்பலகைகளை ஏற்றி வந்த லாரி கப்பலூர் பாலத்தில் இருந்து இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து,நின்று கொண்டிருந்த சிமென்ட் லாரி மீது மோதியது. இதில் மரம் ஏற்றி வந்த லாரியின் டிரைவர் கன்னியாகுமரி பூப்பாண்டியைச் சேர்ந்த நல்லதாஸ் (63), தொத்தவிளையைச் சேர்ந்த கிளீனர் ஜெகன் (55), படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலத்திற்கு அருகில் கட்டண வசூல் மையம் இருக்க கூடாது என்ற விதிமுறையை மீறி இங்கு கட்டண வசூல் மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடக்கிறது. டோல்கேட்டில் பணியில் இருப்பவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.