திண்டுக்கல்: பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தாக கூறப்பட்ட தகவலையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த ஆண்டு துவக்கத்தில் திண்டுக்கல்லில் தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். குண்டர் தடுப்புசட்டத்தில் கைதான இவர், குண்டர் சட்டத்தை ரத்து செய்து வெளியில் உள்ளார். குண்டு வீச்சு?: நேற்று மாலை 6.45க்கு திண்டுக்கல் ஸ்கீம் ரோட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு முத்துப்பாண்டி காரில் வந்தபோது, சிலர் கார் மீது குண்டு வீசி கொல்ல முயன்றதாகவும், முத்துப்பாண்டி தப்பிச்சென்றதாகவும் தகவல் பரவியது. டி.எஸ்.பி., சுருளிராஜா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, பொன்னிவளவன், பிரபாகரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்தில் ஆஜராகினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இல்லை: குண்டுவீச்சு சம்பவம் நடந்ததிற்கான முகாந்திரம் இல்லை, என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பக்கத்து கடைக்காரர்களிடம் விசாரித்த போது, அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றே தகவல் கூறியுள்ளனர். போலீசார் கூறியதாவது: சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் தடயங்கள் எதுவும் இல்லை. இது ஒரு நாடகமாக இருக்கலாமோ என சந்தேகிக்க தோன்றுகிறது. இருந்தா லும் விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.