மதுரை: "மதுரையில் மாயமாகி, மீட்கப்பட்ட மனநலம் பாதித்த பெண்ணிற்கு, அரசு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்,' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை தெற்குவாசல் காந்தி தாக்கல் செய்த மனு: எனது சகோதரி மகாலட்சுமி, 43, மனநலம் பாதிக்கப்பட்டவர், செப்.,24 ல் மாயமானார். தெற்குவாசல் போலீசில் புகார் செய்தேன். இதுவரை கிடைக்கவில்லை. மகாலட்சுமியை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எஸ்.நாகமுத்து பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மகாலட்சுமியை, இன்ஸ்பெக்டர் ஆஜர்படுத்தினார். மகாலட்சுமி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். உடன் சகோதரர் நாகசுந்தரம் ஆஜரானார். அவர்,"" 2 ஆண்டுகளாக மகாலட்சுமிக்கு மன நிலை சரியில்லை. தஞ்சாவூரில் சிகிச்சை அளித்தோம். தற்போது, மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல உள்ளேன்,'' என்றார். நீதிபதிகள், "சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமே?' என்றனர். நாகசுந்தரம்,""நாங்கள் ஏழை. அங்கு அழைத்து செல்வதில் சிரமம் உள்ளது. மனுதாரருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஆஜராகவில்லை,'' என்றார். நீதிபதிகள் உத்தரவு: மகாலட்சுமி குடும்பத்தினர் வறுமையில் உள்ளனர். மகாலட்சுமிக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்க, டீன் ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால், உள்நோயாளியாக அனுமதிக்கலாம். ஒரு பெண் போலீஸ், பாதுகாப்புக்குச் செல்ல வேண்டும். தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கான செலவை, அரசு ஏற்க வேண்டும், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.