தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., நினைவு நாள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காதது குறித்து கட்சி நிர்வாகிகள் நகர செயலாளரிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 25ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.நேற்று காலை, 9.30 மணிக்கு கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் என காலை, 9 மணிக்கு என கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.ஆனால், காலை, 9.15 மணிக்கு மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி தலைமையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த முன்னாள் நகர செயலாளர் ரவி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் தகடூர் விஜயன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் நிகழ்ச்சி முடிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அங்கிருந்த நகர செயலாளர் குருநாதனிடம் சிலைக்கு மாலை அணிவிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்காதது குறித்து முன்னாள் நகர செயலாளர் ரவி உள்ளிட்ட கட்சி
நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர்.அவர்களது கேள்விக்கு நகர செயலாளர் பதிலளிக்க முடியாமல் திணறினார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.இதைப்பார்த்த கட்சி முக்கிய நிர்வாகிகள் அடுத்தது பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் என கூறி அங்கிருந்து நழுவினர். தொடர்ந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும், கட்சி நிர்வாகிகள் நகர செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.