district news | தொழிலாளர் குழந்தைகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் குழந்தைகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் வரவேற்பு

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொழிலாளர் ஆய்வாளர் லட்சுமி நாராயணன் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.புத்தகங்கள் வாங்க, ப்ளஸ்1 வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம் , பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு மற்றும் பட்ட படிப்புகளுக்கான கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்ப்படுகிறது.தொழிற்பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையும்,எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மூன்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் தொழிலாளர் நலநிதி செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.இதற்கான விண்ணப்பங்களை பெற, "செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்-718, சென்னை-6' என்ற முகவரிக்கு, சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் விண்ணப்பிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை