புதுக்கோட்டை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி, ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென வேலைவாய்ப்புத்துறை
ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.புதுக்கோட்டையில் தமிழ்நாடு வேலைவாய்ப்புத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் சங்கர சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் கணேசமூர்த்தி, துணைத்தலைவர்கள் செல்வராஜ், தனசேகரன், இணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், ராமநாதன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.தமிழகம் முழுவதும், 30 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 245 உதவியாளர், 25 இளநிலை உதவியாளர், 25 தட்டச்சர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இவை மொத்த பணியிடங்களில், மூன்றில், ஒரு பகுதியாகும். இதனால் நிர்வாக நடவடிக்கைகளில் காலதாமதமும், பணிச்சுமையும் அதிகரித்துவருகிறது. பதிவுதாரர் நலன் கருதி காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதைக் கண்டித்தும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும், பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிடவேண்டும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களை, பணிவரன் முறை செய்து ஊதியம் வழங்கவேண்டும், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருபவர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், பிப்ரவரி, 13ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து, போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், 20, 21ம் தேதிகளில் நடக்கவுள்ள அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதெனவும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.