உடையார்பாளையம்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது.வட்டத்தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். ஹாஜி காதர்பாட்சா, மணி ராசமாணிக்கம் முன்னிலை வகித்தனர். சாமிகண்ணு வரவேற்றார்.செயலாளர் ராமமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். உடையார்பாளையம் ஆர்.டி.ஓ., கஸ்தூரி துவக்கி வைத்தார். சங்க மாநில பொருளாளர் சுந்தரம், துணைத்தலைவர் ராமு, சிதம்பரம் பேசினர்.மூத்தவர்களை, டாக்டர் ஜெயராமன், எம்.ஆர். கல்லூரியின் தாளாளர் ரகுநாதன், ஆண்டிமடம் வட்டார தலைவர் வைத்தி, பன்னீர்செல்வம், ராமசாமி, மகாலிங்கம் ஆகியோர் பாராட்டி பேசினர். விலைவாசியை கருத்தில் கொண்டு மாத மருத்துவப்படி, பென்சனர் மருத்துவ நிதியை உயர்த்தி தர வேண்டும். பாதுகாப்பு நிதியை உயர்த்தி அதில் மரண சடங்குக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டார பொருளாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.