கும்பகோணம்: திருநாகேஸ்வரம் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த கண்சிகிச்சை முகாமில், 290 பேர் சிகிச்சை பெற்றனர்.கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் செட்டித்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ரெங்கநாதன்-பிச்சையம்மாள் குடும்பத்தினர், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. முகாமை, திருநீலக்குடி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நாகலெஷ்மி துவக்கி வைத்தார். லயன்ஸ் சங்க தலைவர் மாதவன் தலைமை வகித்தார். சாசனத்தலைவர் பிரசாத், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், சங்க செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் ராஜ்குமார், ரவி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், 290 பேர் கலந்துகொண்டு சிகிச்சை ஆலோசனை பெற்றனர். கண் அறுவை சிகிச்சைக்காக, 90 பேர் தேர்வு செய்யப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.