திருச்சி: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உத்தமர்சீலியை சேர்ந்த விவசாயி வீட்டுக்கு வருவாய் அதிகாரிகள், போலீஸ் படை சூழ குடிநீர் இணைப்பு வழங்கினர்.திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ள உத்தமர்சீலி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை, 74. விவசாயி. கடந்த சில மாதங்களுக்கு முன், இவரது வீட்டருகே செல்லும் சாலையில் சாக்கடை வாய்க்கால் கட்டும் பணி நடந்தது. இதற்காக அந்த தெருவில் வசித்த, 80 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.சாக்கடை வாய்க்கால் கட்டுமான பணி முடிந்த பின், செல்லதுரை வீட்டை தவிர, 79 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த செல்லதுரை, குடிநீர் இணைப்பு வழங்காததுக்கான காரணம் கேட்டபோது, "வீடு அமைந்துள்ள இடம் பிரச்னையில் இருப்பதால், குடிநீர் இணைப்பு தர முடியவில்லை' என்று பஞ்சாயத்து நிர்வாகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் புகார் அளித்தார். அவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும்படி அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் இடம்பிரச்னை தொடர்பாக உள்ளூர் பிரமுகர்கள் எதிர்ப்பால், இணைப்பு வழங்கவில்லை.வெறுப்படைந்த செல்லதுரை, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், செல்லதுரை வீட்டுக்கு உடனே இணைப்பு வழங்குமாறு, திருச்சி கலெக்டர், அந்தநல்லூர் பி.டி.ஓ., ஸ்ரீரங்கம் தாசில்தார், சமயபுரம் இன்ஸ்பெக்டர், உத்தமர்சீலி பஞ்சாயத்து தலைவர் ஆகியோருக்கு உத்தரவிட்டது.அதன்பேரில், அதிகாரிகள் இணைப்பு வழங்க சென்றபோது, உள்ளூர் பிரமுகர்கள் சிலர் எ திர்ப்பு தெரிவித்தனர். இதனால், இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் திரும்பினர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் தாசில்தார், பி.டி.ஓ., வருவாய் அலுவலர், வி.ஏ.ஓ., பஞ்சாயத்து திலைவர் ஆகியே õர் முன்னலையில், செல்லத்துø ர வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்தது.யாரா÷னும் தகராறு செய்தால், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய, லால்குடி டி.எஸ்.பி., தலைமையில், சமயபுரம் இன்ஸ்பெக்டர் உள்பட 50க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். ஒருவழியாக இணைப்பு வழங்கப்பட்டது. அரசு அதிகாரிகள், போலீஸார் குவிந்ததால் உத்தமர்சீலியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.