திருச்சி: அரசு பஸ் டிரைவரை கத்திரிக்கோலால் குத்தியை வாலிபரை, பயணிகள் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி, நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல், 40. துவாக்குடி அரசு பஸ் டெப்போவில் டிரைவராக வேலை பார்க்கிறார். சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து நேற்று முன்தினம் துவாக்குடியை நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. பஸ்ஸை சக்திவேல் ஓட்டினார். திருவெறும்பூர் பஸ் நிறுத்தத்தில், மற்றொரு அரசு பஸ் டிரைவரிடம், திருச்சி, தென்னூர், வாமடத்தைச் சேர்ந்த பிரபு, 27, என்பவர் தகராறு செய்து கொண்டிருந்தார்.இதை பார்த்து பஸ்ஸை நிறுத்திய சக்திவேல், இறங்கி சென்று, சமாதானம் செய்து வைத்தார். பின்னர் பஸ்ஸை எடுத்துக் கொண்டு துவாக்குடியில் பயணிகளை இறக்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து மற்றொரு பஸ்ஸில் வந்த பிரபு, சக்திவேலிடம் தகராறு செய்தார்.தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து, சக்திவேலின் கழுத்தில் குத்தினார். நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்திலிருந்த பயணிகள், பொதுமக்கள், தப்பியோட முயன்ற பிரபுவை மடக்கிப்பிடித்து, துவாக்குடி போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து துவாக்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.