முசிறி: சொரியம்பட்டியில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.முசிறி அருகேயுள்ள சொரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சோழமுத்து, 70. இவரது மனைவி செல்லம்மாள், 68. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்தில் இருந்த தாலி மற்றும் காது நகைகள் பறிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக புகாரின்படி, முசிறி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.திருச்சி எஸ்.பி., லலிதாலட்சுமி உத்தரவின் பேரில், முசிறி டி.எஸ்.பி., தங்கவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிசக்கரவர்த்தி, குமரேசன், வின்சென்ட் ஆகியோர் தலைமையி ல் மூன்று தனிப்படைகள் அமை க்கப்பட்டு, செல்லம்மாளை கெ õலை செய்த குற்றவாளியை பல் வே இடங்களில் தேடிவந்தனர்.இந்நிலையில் செல்லம்மாளின் பக்கத்துவீட்டில் வசித்த டீ மாஸ்டர் தேவராஜ், 47, செல்லம்மாள் கொலையான தினத்திலிருந்து காணவில்லை என்று தெரிகிறது. அவர்மீது சந்தேகப்பட்ட போலீஸார், அவரை தேடி வந்தனர். இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி தலைமையிலான போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முசிறி பஸ்ஸ்டாண்டில் வெளியூருக்கு தப்பி செல்ல நின்று கொண்டிருந்த தேவராஜை கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில், செல்லம்மாளை கொலை செய்து, அவருடைய நகைகளை திருடியதை தேவராஜ் ஒப்புக் கொண்டார். மேலும், அவருடைய சொந்த ஊர், கோவை வடக்கு கவுண்டம்பாளையம் சங்கனூர் எனவும், தனது இரண்டாவது மனைவியுடன் முசிறிக்கு வந்து கடந்த, நான்கு மாதங்களாக ஹோட்டலில் வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.திருடிய நகைகள் குளித்தலை மற்றும் ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய இடங்களில் விற்றதாக தேவராஜ் தெரிவித்ததின் பேரில், நகைகளை கைப்பற்றி, தேவராஜை துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.