தொட்டியம்: திருநாராயணபுரத்தில் உள்ள, வேதநாராயண பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு விழா நடந்தது.தொட்டியம் அருகேயுள்ள திருநாராயணபுரத்தில் உள்ள வேதநாராயண பெருமாள் கோ விலில் பரமபத வாசல் திறப்பு விழா நடந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் கடந்த, 14ம் தேதி துவங்கியது. பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம், நம்பெருமாள் மோகனாவதாரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை சிவப்பு அங்கி அணிந்து பக்தர்கள் புடைசூழ மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை, 5 மணியளவில் பரமபத வாசல் திறப்பு விழா நடந்தது.அப்போது பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா' என, பக்தி பரசவத்தில் முழக்கமிட்டனர். பின்னர் நம்பெருமாள் உள்பிரகாரத்தில் உலாவந்து, ஸ்ரீ கிருஷ்ணர் மண்டபத்தில் எழுந்தருளி நம்மாழ்வார்களுக்கும், பக்தர்களுக்கும் ஸேவை சாதித்தனர்.விழாவில் முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், பாலசமுத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம பொ துமக்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தொட்டியம் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீஸார் செய்திருந்தனர். மேலும் பாதுகாப்பு முன்னேற்பாடான தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.